breast size: மார்பகம் சிறியதாக உள்ளதா? இந்த எளிய பயிற்சிகளைச் செய்து பெரிதாக்கலாம்!


Shobana Vigneshwar
29-11-2022, 17:09 IST
www.herzindagi.com

    மார்பகம் சிறியதாக இருப்பதால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனாலும், இதனால் தாழ்வுமனப்பான்மை ஒரு பெண்ணுக்கு உண்டாகிறது. அதனால், மார்பகத்தின் அளவை பெரிதாக்கும் சில எளிய பயிற்சிகளை இங்கே படித்து பயன்பெறலாம்.

Image Credit : freepik

புஷ்-அப்ஸ்

    புஷ் அப்கள் செய்வதன் மூலம், உடலின் மேல் பகுதி வலுவடைகிறது. அதே சமயம், மார்பகங்களின் அளவும் அதிகரிக்கிறது. இந்தப் பயிற்சியை ஒரு நாளைக்கு குறைந்தது 8-10 முறை செய்ய வேண்டும்.

Image Credit : freepik

சுவர் புஷ் அப்ஸ் உடற்பயிற்சி

    இரண்டு கைகளையும் சுவரின் மீது வைத்து, உடலை சுவரை நோக்கித் தள்ளுவது சுவர் புஷ் அப் பயிற்சியாகும். இது மார்பகத்தின் அளவை சரி செய்து, உடலை வசீகரமாக மாற்றுகிறது.

Image Credit : herzindagi

தனுராசனம்

    இந்த பயிற்சியை செய்ய, குப்புற படுத்து, உங்கள் இரு கைகளையும் பின்னோக்கி நகர்த்தி, பாதங்களைப் பிடிக்க முயற்சிக்கவும். இது உடல் முன் பகுதியின் நீட்சிக்கு வழிவகுக்கிறது.

Image Credit : freepik

புஜங்காசனம்

    இந்த பயிற்சியை செய்ய, முதலில் குப்புற படுக்கவும், பின்னர் உடலின் முன் பகுதியை வானத்தை நோக்கி வளைக்க முயற்சிக்கவும். இந்த உடற்பயிற்சி செய்வது, உடலின் மேற்பகுதியில் நீட்சியை உருவாக்குகிறது.

Image Credit : freepik

மார்பு அழுத்த உடற்பயிற்சி

    மார்பு அழுத்த உடற்பயிற்சி மார்பக அளவை சரியானதாக்குகிறது. இதை செய்வதற்கு, படுத்த நிலையில், உங்கள் கைகளை மார்பகத்தின் மட்டத்திற்கு உயர்த்த வேண்டும். இதை தினமும் செய்வதன் மூலம், வித்தியாசத்தை நீங்களே காண்பீர்கள்.

Image Credit : herzindagi

செஸ்ட் ஃபிளை உடற்பயிற்சி

    செஸ்ட் ஃபிளை உடற்பயிற்சி செய்வதால் மார்பு அகலமாகமவும், வளைவாகவும் மாறும். கால்கள் தரையில் ஊன்றிய நிலையில், படுக்கவும். உங்கள் கைகளை 90 டிகிரி தூக்கிய பின் இருபுறமும் திறந்து மூடவும்.

Image Credit : herzindagi

ஜாகிங்

    இந்தப் பயிற்சிகளைத் தவிர, தினமும் ஜாகிங் செல்லுதல், நீச்சல், நடனம் ஆடுதல், ஓட்ட பயிற்சி போன்றவற்றையும் செய்யலாம். மார்பகத்திற்கான சிறந்த உடற்பயிற்சியாக நீச்சல் கருதப்படுகிறது.

Image Credit : freepik

    இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Image Credit : freepik