யோகா பயிற்சியில் ஈடுபடும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க
Alagar Raj AP
19-07-2024, 14:48 IST
www.herzindagi.com
யோகா ஒரு அற்புதமான பயிற்சியாகும், அதை நாம் சரியாக செய்யும் போது அதன் முழு பலனையும் நம் உடல் பெறும். ஆனால் நாம் யோகாவில் ஈடுபடும் போது செய்யும் சில தவறுகளால் மோசமான காயங்கள் உண்டாக வாய்ப்புள்ளது. அப்படி நாம் செய்யும் தவறுகளால் ஏற்படும் காயங்கள் மற்றும் அதை தடுக்க என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.
முழங்கால் காயங்கள்
முழங்கால்களில் அதிகப்படியான அழுத்தம் அல்லது தவறான உடல் சீரமைப்பு முழங்கால்களில் தசை கிழிவு, தசை பிடிப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
தோள்பட்டை காயம்
தோள்பட்டை இயக்கங்களை மீண்டும் மீண்டும் செய்யும் போது தசையை எலும்புடன் இணைக்கும் தசை நார்களில் காயம் ஏற்படலாம். இதனால் தோள்பட்டை வலி மற்றும் பலவீனம் போன்ற அசௌகரியத்தை உணரலாம்.
கீழ் முதுகு வலி
மோசமான உடல் சீரமைப்பு கீழ் முதுகின் தசைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் கீழ் முதுகில் வலி தசைப்பிடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
மணிக்கட்டில் காயம்
யோகாவின் போது மணிக்கட்டில் அதிக அழுத்தம் கொடுத்தால் வலி, அசௌகரியம் ஏற்படலாம். அல்லது உணர்வின்மை, கூச்ச உணர்வு போன்ற கார்பல் டன்னல் நோய்க்கு வழிவகுக்கும்.
கழுத்து வலி
தலையை தவறாக நிலைப்படுத்துவது அல்லது கழுத்தை அதிகம் நீடிப்பது கழுத்து வலி அல்லது காயத்தை ஏற்படுத்தலாம்.
தடுப்புமுறை
யோகாவின் போது காயங்கள் ஏற்படாமல் இருக்க உடல் சீரமைப்பில் கவனம் செலுத்துங்கள். யோகா செய்வதற்கு முன் நன்றாக ஓய்வெடுங்கள், நீரேற்றமாக இருங்கள். மேலும் யோகா செய்வதற்கு முன் மூச்சுப் பயிற்சி செய்து மனதை ஒருநிலைப் படுத்துங்கள்.