கார்டியோ என்பது உங்கள் இதயத் துடிப்பை அதிகரிக்கும் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு வகையான உடற்பயிற்சி ஆகும். ஓட்டம், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் மற்றும் விறுவிறுப்பான நடைப்பயிற்சி போன்றவை இந்த பயிற்சியில் அடங்கும். எனவே இந்த பதிவில் கார்டியோ உடற்பயிற்சியின் நன்மைகளை அறிவோம்.
இதய ஆரோக்கியம்
இந்த உடற்பயிற்சி நீண்ட, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உங்கள் இதயத்தை வலிமையாக வைத்திருக்கும்.
முதுகு வலி நிவாரணம்
கார்டியோ உடற்பயிற்சி உங்கள் முதுகெலும்புக்கு ஆதரவாக இருப்பதால் உங்களை பாடாய் படுத்தும் முதுகு வலிக்கு இது நிவாரணம் அளிக்கும்.
எடை கட்டுப்பாடு
இந்த உடற்பயிற்சியில் ஈடுபடும் போது உங்கள் உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை குறைக்க உதவுகிறது.
சுவாச ஆரோக்கியம்
நுரையீரல்கள் திறம்பட செயல்பட தேவையான கார்டியோ உடற்பயிற்சி அளிக்கின்றன. இது உங்கள் சுவாச தசைகளை வலுப்படுத்தி எளிதாகவும் ஆழமாகவும் சுவாசிக்க செய்கிறது.
நல்ல தூக்கம்
கார்டியோ உடற்பயிற்சி உங்களுக்கு தேவையான நீண்ட மற்றும் ஆழமான தூக்கத்தை அளிக்கும்.
மனநலம்
கார்டியோ உடற்பயிற்சி செய்யும் போது இதயத் துடிப்பு மற்றும் சுவாசம் அதிகரிப்பதால் எண்டோர்பின்கள் வெளிப்படுகிறது. இதனால் மன அழுத்தம், குறைகிறது.