குளிர்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் சி நிறைந்த பானங்கள்
Alagar Raj AP
02-12-2024, 14:21 IST
www.herzindagi.com
வைட்டமின் சி
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முக்கிய வைட்டமின்களில் ஒன்று வைட்டமின் சி. நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டில் பங்கு வகிக்கும் வைட்டமின் சி குளிர்காலத்தில் ஏற்படும் காய்ச்சல், ஜலதோஷம் போன்ற பாதிப்புகளில் தீவிரத்தை குறைக்க உதவுகிறது.
வைட்டமின் சி பானங்கள்
காய்ச்சல், ஜலதோஷம் போன்ற குளிர்கால நோய்களில் இருந்து உடலை பாதுகாக்கும் வைட்டமின் சி நிறைந்த பானங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆரஞ்சு ஜூஸ்
வைட்டமின் சி-யின் சிறந்த மூலமாக உள்ள ஆரஞ்சு ஜூஸ் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கிறது. இதனால் காய்ச்சல் மற்றும் ஜலதோஷத்திற்கு எதிராக போராடுவதில் ஆரஞ்சு ஜூஸ் பயனுள்ளதாக இருக்கும்.
இஞ்சி டீ
இஞ்சி டீயில் அதிக அளவு உள்ள வைட்டமின் சி, மெக்னீசியம் மற்றும் பிற தாதுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து குளிர்கால நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.
திராட்சை ஜூஸ்
ஆரஞ்சு ஜூஸுக்கு பிறகு வைட்டமின் சி-யின் சிறந்த ஆதாரமாக இருக்கும் திராட்சை ஜூஸ் குளிர்கால பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளுக்கு எதிராக போராட உதவுகிறது.
லெமன் டீ
சூடான லெமன் டீயில் தேன் கலந்து குடித்தால் பருவகால நோய்களிலிருந்து நிவாரணம் அளிக்கும். எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி மற்றும் தேனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சிறந்த நோயெதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது.
பீட்ரூட் ஜூஸ்
பீட்ரூட்டில் உள்ள வைட்டமின் சி உடலில் உள்ள வெள்ளை அணுக்களை உற்பத்தி செய்கிறது. இது குளிர்காலத்தில் நோய் தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது.
மஞ்சள் டீ
மஞ்சளில் உள்ள வைட்டமின் சி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற பருவகால நோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது.