அடிவயிறு கொழுப்பு குறைய காய்கறி போதும், இப்படி ஜூஸ் போட்டு குடிங்க!


Shobana Vigneshwar
29-09-2023, 08:00 IST
www.herzindagi.com

அடிவயிறு கொழுப்பு குறைய ஜூஸ்

    பிடிவாதமான தொப்பை குறைப்பை குறைக்க வேண்டுமா? இதற்கு கடினமான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டிய அவசியமே இல்லை. எடையை குறைக்க வீட்டில் இருக்கக்கூடிய இந்த காய்கறிகளைக் கொண்டு ஜூஸ் போட்டு குடியுங்கள்…

Image Credit : freepik

பீட்ரூட் ஜூஸ்

    உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பீட்ரூட் ஜூஸை தங்களுடைய உணவு முறையில் சேர்த்துக் கொள்ளலாம். இது அதிகப்படியான தொப்பை கொழுப்பை குறைக்க உதவும்.

Image Credit : freepik

கேரட் ஜூஸ்

    குறைந்த அளவு கலோரிகளும் அதிக நார்ச்சத்துக்களும் நிறைந்த கேரட் ஜூஸ் எடை இழப்புக்கு சிறந்தது. இதை உங்களுடைய தினசரி உணவு முறையில் சேர்த்து பயன்பெறலாம்.

Image Credit : freepik

முட்டைக்கோஸ் ஜூஸ்

    வயிற்று பொருமலால் அவதிப்படுபவர்களுக்கு இந்த ஜூஸ் சிறந்தது. இதை பெண்கள் தினமும் குடித்து வர உடல் எடை மற்றும் தொப்பையை சுலபமாக குறைக்க முடியும்.

Image Credit : freepik

சுரைக்காய் ஜூஸ்

    இந்த அற்புதமான காய்கறி ஜூஸ் உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும். இது பசி உணர்வை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது.

Image Credit : freepik

கீரை ஜூஸ்

    சத்துக்கள் நிறைந்த இந்த அற்புதமான கீரை ஜூஸை தவறாமல் உங்களுடைய தினசரி உணவு முறையில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது உடல் எடையை குறைப்பதோடு மட்டுமின்றி ஆரோக்கியத்திற்கும் பல அற்புத நன்மைகளை தரும்.

Image Credit : freepik

படித்ததற்கு நன்றி

    இந்த தகவல் பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Image Credit : freepik