மாதுளம் பழத்தில் உள்ள அந்தோசயனின்கள், ஃபிளாவனாய்டுகள், டானின்கள் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இதய செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன.
ஸ்ட்ராபெர்ரி
ஸ்ட்ராபெர்ரி இதயத்தை ஆரோக்கியமாக வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் தாவர சேர்மங்கள் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுவதோடு இன்சுலினுக்கான உங்கள் உடலின் உணர்திறனை மேம்படுத்த உதவுகிறது.
ஆப்பிள்
ஆப்பிள் பல வழிகளில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அவற்றில் ஒன்று ஆப்பிளில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து உடலில் கொழுப்பை குறைக்க உதவுகிறது.
தர்பூசணி
தர்பூசணியில் உள்ள வைட்டமின் சி, கரோட்டின், லைகோபீன் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் கொழுப்பை குறைத்து இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.
செர்ரிப்பழம்
செர்ரி பழத்தில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவும். மேலும் இதன் பாலிஃபீனால் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் செல் சேதத்தில் இருந்து இதயத்தை பாதுகாக்கிறது.
டிராகன் பழம்
டிராகன் பழத்தில் கூழில் உள்ள பீட்டாலைன்கள் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. இதன் விதைகளில் உள்ள ஒமேகா 3 மற்றும் ஒமேகா 9 கொழுப்பு அமிலங்கள் இதய நோய் அபாயத்தை குறைக்கிறது.
இலந்தை பழம்
இலந்தை பழத்தில் இருக்கும் பொட்டாசியம், இரும்பு, துத்தநாகம், பாஸ்பரஸ் மற்றும் மாங்கனீசு ஆகியவை இதய ஆரோக்கியத்தை பராமரிப்பதில் பயனுள்ளதாக இருக்கிறது.