முள்ளங்கி சாப்பிடக் கூடாத அந்த 6 பேர் யார் தெரியுமா?
Alagar Raj AP
23-10-2024, 17:58 IST
www.herzindagi.com
முள்ளங்கியில் உள்ள வைட்டமின் சி, பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை தடுக்க உதவுகிறது. இருப்பினும் இதனை உட்கொள்வது சிலருக்கு நல்லதல்ல. அவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
சிறுநீரக நோயாளிகள்
சிறுநீரகங்களில் கற்களை ஏற்படுத்தும் பித்த ஓட்டத்தை முள்ளங்கி அதிகரிக்கிறது. இதனால் சிறுநீரகம் மற்றும் பித்தப்பை கல் நோயாளிகள் முள்ளங்கி சாப்பிட கூடாது.
சர்க்கரை நோயாளிகள்
நீங்கள் சர்க்கரை நோய்களுக்கான மருந்துகளை எடுத்துக் கொள்ளும் நமபராக இருந்தால் முள்ளங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
கர்ப்பிணிகள்
கர்ப்பிணிகள் அல்லது பாலூட்டும் தாய்மார்கள் முள்ளங்கியிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். முள்ளங்கிகளை உட்கொள்வது சால்மோனெல்லா மற்றும் ஈ.கோலி பாக்டீரியா தொற்றை ஏற்படுத்தும். இதன் விளைவாக உங்கள் குழந்தையின் ஆரோக்கியம் பாதிக்கலாம்.
தைராய்டு நோயாளிகள்
முள்ளங்கியின் கோயிட்ரோஜெனிக் பண்புகள் தைராய்டு சுரப்பியை செயலிழக்க செய்யும். தைராய்டு நோயாளிகள் முள்ளங்கி சாப்பிடக் கூடாது.
குடல் நோயாளிகள்
முள்ளங்கியில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இதை அதிகம் உட்கொண்டால் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, குடல் அடைப்பு, வாயு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம் என்பதால் குடல் நோயாளிகள் முள்ளங்கியை தவிர்க்க வேண்டும்.
ஆற்றல் குறைவானவர்கள்
முள்ளங்கி சாப்பிடுவது சிறுநீர் கழிப்பதை அதிகரிக்கும். இதனால் உடலில் திரவத்தின் அளவு குறைத்து சோர்வு, தலைவலி, தலைசுற்றல் மற்றும் வாந்தி போன்ற பாதிப்புகள் வரும். எனவே முள்ளங்கியை அளவோடு சாப்பிட வேண்டும்.