மிருணாள் தாக்கூரின் வளைவு நெளிவான தேகத்திற்கு இது தான் காரணமா?


Alagar Raj AP
07-04-2025, 19:59 IST
www.herzindagi.com

மிருணாள் தாக்கூர்

    தனது நடிப்புத் திறமை மற்றும் உடல் அமைப்பால் அனைவரையும் பிரமிக்க வைத்தவர் மிருணாள் தாக்கூர். தற்போது 32 வயதான இவர் பல படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் தனது உடலை வளைவு நெளிவாக அப்படியே மெயிண்டெயின் செய்வதிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கு இவர் சில குறிப்பிட்ட உணவுகளை மட்டுமே சாப்பிடுவாராம். அவை என்னென்ன உணவுகள் என்பதை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

நீரேற்றம்

    மிருணாள் தாக்கூர் தினமும் எட்டு கிளாஸ் கொதிக்க வைத்த தண்ணீரை குடிப்பாராம். ஏனெனில் உடல் நீரேற்றமாக இருப்பது வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உடல் எடையை குறைக்க உதவும்.

புரத உணவுகள்

    இவரது டயட்டில் புரதம் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் இருக்குமாம். குறிப்பாக காய்கறிகள், பழங்கள், முட்டை மற்றும் பிரவுன் பிரட் ஆகியவை அடங்கும்.

சிற்றுண்டிகள்

    நட்ஸ், ஓட்ஸ் குக்கீகள், பூசணி விதைகள் மற்றும் முளைகட்டிய பயிர்கள் ஆகியவை மிருணாள் தாக்கூரின் விருப்பமான சிற்றுண்டியாகும். பயணம் செய்யும் போது இந்த சிற்றுண்டிகளை கூடவே எடுத்து செல்வாராம்.

உடற்பயிற்சி உணவுகள்

    உடற்பயற்சி செய்யும் போது பாதாமால் செய்யப்பட்ட புரோட்டீன் பார்கள், புரோட்டீன் ஷேக்குகள், சோயா பால் மற்றும் அவல் ஆகியவற்றை எடுத்துக் கொள்கிறார். இந்த உணவுகள் உடற்பயிற்சிக்கு பிறகு தசை வளர்ச்சி மற்றும் ஆற்றலை தரும்.

மிருணாள் தவிர்க்கும் உணவுகள்

    இவர் தனது டயட்டில் கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்ட துரித உணவுகளை தவிர்க்கிறார்.

மிருணாளுக்கு விருப்பமான உணவுகள்

    உணவு பிரியரான இவர் பீட்சா, பாஸ்தா, சீஸ் மற்றும் கேக்குகளை விரும்பி சாப்பிடுவார். இந்த உணவுகளில் கிடைக்கும் கலோரிகளை தனது டயட் மற்றும் உடற்பயிற்சி மூலம் பேலன்ஸ் செய்து விடுவார்.