தினமும் 2 வேப்பிலைகளை மென்று சாப்பிட்டால் கிடைக்கும் மருத்துவ நன்மைகள்
Alagar Raj AP
16-10-2024, 12:43 IST
www.herzindagi.com
ஆயுர்வேத அற்புதம்
வேப்ப மரத்தின் இலைகள் கிளைகள் மற்றும் விதைகள் ஆகியவை ஆயுர்வேத மருத்துவத்தில் வெவ்வேறு வழிகளில் பயன்படுத்தப்படுகிறது. இப்படியான சிறப்பம்சங்கள் கொண்ட வெப்ப மரத்தின் இலையை தினமும் இரண்டு சாப்பிட்டால் என்ன நன்மைகள் என்பதை பார்ப்போம்.
கட்டுப்படுத்தப்படும் நீரிழிவு
நீரிழிவு நோயாளிகள் காலை வெறும் வயிற்றில் வேப்பிலைகளை சாப்பிட்டு வர இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
வயிற்றை சுத்தப்படுத்தும்
வேப்பிலைகளில் காணப்படும் அலர்ஜி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் வயிற்றை சுத்தம் செய்கிறது. இதனால் மலச்சிக்கல் மற்றும் வயிற்று உப்புசம் போன்ற இரைப்பை குடல் குறையும்.
இரத்தம் சுத்திகரிக்கப்படும்
வேப்பிலைகளில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இரத்தத்தை சுத்திகரிக்கிறது. அதே நேரத்தில் உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தையும் வலுப்படுத்துகிறது.
வாய்வழி சுகாதாரம்
வாய்வழி சுகாதாரத்திற்கு வேப்பிலைகள் சிறந்தது. இதில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் எதிர்ப்பு பண்புகள் வாயில் பிளேக் உருவாவதை தடுக்கிறது. மேலும் ஈறுகளை பாக்டீரியாக்களில் இருந்து பாதுகாக்கிறது.
கலோரிகளை எரிக்கும்
வேப்பிலைகளில் உள்ள பல வகையான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கலோரிகளை எரிக்கிறது. எனவே இது உடல் எடை குறைவதற்கும் பங்களிக்கிறது.
கல்லீரல் ஆரோக்கியம்
வேப்பிலைகளில் கல்லீரல் உயிரணுக்களில் ஃப்ரீ ரேடிக்கல் உருவாவதைக் குறைக்கும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளது. இவை கல்லீரலை நோய்களில் இருந்து பாதுகாத்து திறம்பட இயங்க செய்யும்.