ஆரோக்கியத்தை மேம்படுத்த இரும்புசத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுங்க!
G Kanimozhi
05-08-2024, 11:47 IST
www.herzindagi.com
நம் உடலுக்கு தேவையான இரும்புச்சத்தை சில உணவுப் பொருட்கள் மூலம் எளிதாக பெறலாம்.
கீரை
கீரைகளில் இரும்பு சத்து அதிக அளவு நிறைந்துள்ளதால் இது உங்கள் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்க பெரிதும் உதவுகிறது.
நட்ஸ்
பாதாம் பருப்பு, வால் நட்ஸ், முந்திரி பருப்பு, ஆப்பிரிக்காட், உலர்ந்த பழங்கள் மற்றும் பேரிச்சம்பழம் போன்ற நட்ஸ் வகைகளில் இரும்பு சத்து அதிக அளவு நிறைந்துள்ளது.
பருப்பு
சோயா பீன்ஸ், பாசிப்பருப்பு போன்ற பருப்பு வகைகளில் இரும்பு சத்து அதிக அளவு காணப்படுகிறது. துவரம் பருப்பை காட்டிலும் பாசிப்பருப்பு நம் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
விதைகள்
சூரியகாந்தி விதைகள், பூசணி விதைகள், ஆளி விதைகள் போன்ற விதைகளில் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக இந்த விதைகளில் இரும்புச்சத்து அதிக அளவு நிறைந்துள்ளதால் நம் உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்க உதவுகிறது.
டார்க் சாக்லேட்
சாக்லேட் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. அந்த வரிசையில் இந்த டார்க் சாக்லேட் நம் உடலுக்கு தேவையான இரும்பு சக்தியும் ஆன்டி-ஆக்சிடென்ட்களையும் அளிக்கிறது.
இது போன்ற தகவல்களுக்கு ஹெர் ஜிந்தகி பக்கத்தில் இணைந்திருங்கள்.