இன்டர்மிட்டண்ட் டயட் இருந்தால் பெண்களுக்கு ஏற்படும் பக்க விளைவுகள் என்ன?


Staff Writer
24-04-2024, 20:06 IST
www.herzindagi.com

இன்டர்மிட்டண்ட் டயட்

    இன்டர்மிட்டண்ட் டயட் என்பது 16:8 உணவு முறை திட்டம். அதாவது 8 மணி நேரம் மட்டுமே நீங்கள் உணவு சாப்பிடலாம், மீதமுள்ள 16 மணி நேரமும் உணவு ஏதும் சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும்.

கருவுறுதல் பாதிக்கும்

    இன்டர்மிட்டண்ட் ஃபாஸ்டிங் செய்யும் பெண்களின் இனப்பெருக்க ஹார்மோன்கள் பாதிப்படைகிறது.

மன அழுத்தம்

    நம் உடலுக்கு தேவையான கலோரிகள் குறைந்து மன அழுத்தம், பசி, தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

தூக்கமின்மை

    சரியான வேலைகளில் உணவு சாப்பிடாமல் தவிர்ப்பது தூக்கத்தை பாதிக்க கூடும்.

மயக்கம்

    தலைவலி, தலைசுற்றல், மயக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட பல காரணங்கள் இருந்தாலும் ஒரு சில நேரங்களில் சரியான உணவு முறை இல்லாவிட்டாலும் இந்த பிரச்சனைகள் ஏற்படலாம்.

மலச்சிக்கல்

    உடலுக்கு தேவையான உணவுகளை சரியான நேரங்களில் உட்கொள்ளாத போது மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

தலை முடி உதிர்வு

    சரியான உணவுகளை உட்கொள்ளாத போது முடி உதிர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.