சோயாபீன் செடியின் விதையில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு இந்த எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இதை நாம் பயன்படுத்துவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
இளமையான சருமம்
சோயாபீன் எண்ணெயில் உள்ள ஒமேகா 3 நமது தோலில் உள்ள கொலாஜனை மீண்டும் உருவாக்க உருவாக்கி சருமத்தில் உள்ள கோடுகள் மற்றும் சுருக்கங்களை மறைய செய்கிறது.
சரும பாதுகாப்பு
இதில் இருக்கும் வைட்டமின் ஈ மற்றும் அழற்சி எதிர்ப்பு சத்துக்கள் புற ஊதா கதிர்வீச்சினால் ஏற்படும் தோல் ஒவ்வாமையில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்கிறது.
முடி வளர்ச்சி
ஒமேகா 3 மற்றும் வைட்டமின் ஈ ஆகியவற்றால் நிறைந்திருக்கும் இந்த எண்ணெய் முடி வளர்ச்சிக்கு நன்மை பயக்கிறது.
இதய ஆரோக்கியம்
இதில் பாலிஅன்சாச்சுரேட்டட் எனப்படும் நல்ல கொழுப்புகள் இதய ஆரோக்கியத்திற்கு பங்களித்து நோய் அபாயத்தை குறைக்கிறது.
எலும்பு ஆரோக்கியம்
சோயாபீன் எண்ணெயில் நிறைந்துள்ள வைட்டமின் கே நமது எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
உங்கள் சமையலில் சாதாரண சாயாமல் எண்ணெய் பயன்படுத்துவதற்கு மாற்றாக இந்த சோயாபீன் எண்ணெயால் சமைப்பது உங்கள் உணவில் அதிக ஊட்டச்சத்தை சேர்க்க ஒரு சிறந்த வழியாகும்.