Palm Jaggery: பனை வெல்லம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
Alagar Raj AP
14-03-2024, 11:43 IST
www.herzindagi.com
எடை இழப்பு
பனை வெல்லத்தில் உள்ள சுக்ரோஸ் உடலுக்கு நீண்ட நேரம் ஆற்றலை வழங்குகிறது. இது நம்மை நீண்ட நேரம் நிறைவாக செய்து பசியைக் குறைக்கிறது. இதன் விளைவாக உடல் எடை குறையும்.
சுவாச பிரச்சனைகள் தடுப்பு
பனை வெல்லம் உடலில் இருந்து தூசி மற்றும் தேவையற்ற துகள்களை வெளியேற்றும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. இது சுவாச குழாய், நுரையீரல், உணவு குழாய்கள், ஆகியவற்றிற்கு நிவாரணம் அளிக்கிறது.
இரத்த சோகையைத் தடுக்கிறது
பனை வெல்லத்தில் நிறைந்துள்ள இரும்புச்சத்து மற்றும் ஃபோலேட் இரத்த சோகையை தடுக்க ஒரு நல்ல வழியாக இருக்கிறது.
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது
பனை வெல்லத்தில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் சோடியம் இரத்த அழுத்த நிலைகளை பராமரிக்கிறது. இது இரத்த நாளங்களை நீர்த்துப் போகச் செய்து, சீரான ரத்த ஓட்டத்தை அனுமதிக்கிறது.
மலச்சிக்கலைத் தடுக்கிறது
ஊட்டச்சத்து நிரம்பிய பனை வெல்லம் குடல் இயக்கங்களை தூண்டி செரிமான அமைப்பை சீராக இயங்க செய்து மலச்சிக்கல் அபாயத்தை குறைக்கிறது.
சளி, இருமலுக்கு தீர்வு
சளி, இருமல் காய்ச்சல் போன்ற அறிகுறிகளை குணப்படுத்த பனை வெல்லம் உதவுகிறது. மேலும் இது தொண்டை புண் அல்லது அரிப்பு போன்ற தொண்டை தொடர்பான நிலைமைகளுக்கு நன்மை பயக்கும்.
சிறுநீர் பாதை பிரச்சனைகளை குணப்படுத்துகிறது
பனை வெல்லத்தை உட்கொள்வதால் சிறுநீர் பையின் வீக்கத்தை குறைத்து சிறுநீரின் சீரான ஓட்டத்தை மேம்படுத்துகிறது.