கோடை வெயிலை சமாளிக்க ஜில்லுனு பழைய சோறு சாப்பிடுங்க!


G Kanimozhi
15-05-2024, 12:27 IST
www.herzindagi.com

    நம் முன்னோர்கள் பலரும் பல ஆண்டு காலம் ஆரோக்கியமாக வாழ இந்த பழைய சோறு தான் காரணம்.

    வடித்த சாதம் மீந்து போகும் போது அதை தண்ணீர் ஊற்றி ஃபிரிட்ஜில் வைத்தால் போதும் பழைய சோறு ரெடி. அடுத்த நாள் காலையில் இந்த பழைய சோறுடன் தயிர், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு நல்லது.

உடல் ஆற்றல்

    பழைய சோறு சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஊட்டச்சத்துகள் கிடைப்பதன் மூலம் உடலுக்கு தேவையான ஆற்றலைத் தருகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

    இந்த பழைய சோறில் உள்ள வைட்டமின் சி நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

இளமை

    தினமும் காலையில் இந்த பழைய சோறை உணவாக சாப்பிட்டு வந்தால் உடல் இளமையாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும்.

வயிற்று கோளாறு

    இந்த பழைய சோறு சாப்பிட்டால் நம் உடலில் தேங்கியுள்ள அதிகப்படியான தீங்கு விளைவிக்கும் வெப்பம் காரணமாக ஏற்படும் வயிற்று கோளாறு பிரச்சனைகள் குணமாகும்.

    இது போன்ற தகவல்களுக்கு ஹெர் ஜிந்தகி பக்கத்தில் இணைந்திருங்கள்.