பயணத்தின் போது தூக்கம் வராமல் இருக்க இதை செய்யுங்க..!
Alagar Raj AP
14-05-2024, 15:04 IST
www.herzindagi.com
நீண்ட தூரம் வாகனங்களில் பயணம் செய்யும் போது தூக்கம் மற்றும் சோர்வு ஏற்படலாம் இருக்க சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பிளாக் காபி
பிளாக் காபியில் உள்ள காஃபின் உங்கள் நரம்பு மண்டலத்தை தூண்டி புத்துணர்ச்சியாக வைக்க உதவுகிறது.
தண்ணீர்
பயணத்தின் போது ஒரு நாளைக்கு 6 - 8 கிளாஸ் தண்ணீர் குடியுங்கள். தண்ணீர் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும், தூக்கத்தை குறைக்கும், நீரிழப்பைத் தடுக்கும்.
சிட்ரஸ் பழச்சாறுகள்
ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழச்சாறுகளை பயணத்தின் போது குடிக்கலாம். சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி மன அழுத்தம் மற்றும் பதட்டத்தால் சோர்வு ஏற்படுவதை குறைக்க உதவுகிறது.
கொட்டைகள் மற்றும் தானியங்கள்
வைட்டமின் பி-யின் நல்ல ஆதாரமான பாதாம், சூரியகாந்தி விதை, பூசணி விதை சோர்வை குறைக்க உதவுகிறது.
மாவுச்சத்து உணவுகள்
அரிசி, பீன்ஸ், உருளைக்கிழங்கு போன்ற மாவுச்சத்துள்ள உணவுகளை பயணத்தின் போது சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இவை எளிதில் தூக்கத்தை வர வைக்கும்.
குளிர்பானங்ள்
சோடா அல்லது குளிர்பானங்களை பயணத்தில் தவிர்க்கவும். இது வீக்கம் மற்றும் தூக்கத்தை ஏற்படுத்தும்.