விமானத்தில் பயணிக்கும் முன் சாப்பிடக்கூடாத உணவுகள்


Alagar Raj AP
24-03-2025, 20:34 IST
www.herzindagi.com

விமான பயணம்

    பொதுவாக பயணிகள் விமானம் சராசரியாக 33,000 முதல் 40,000 அடி உயரத்தில் பறக்கும். அந்த உயரத்தில் பறக்கும் போது உங்களுக்கு உடல் ரீதியாக ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால் நீங்கள் உட்பட அனைத்து பணிகளின் பயணமும் பாதிக்கப்படும். அதனால் விமானத்தில் பயணிக்கும் முன் சாப்பிடக்கூடாத சில உணவுகள் உள்ளன.

காபி

    காபியில் உள்ள காஃபின் உடலில் நீரிழப்பை உண்டாக்கும். இதனால் நீங்கள் உயரத்தில் பறக்கும் போது தலைவலி அல்லது குமட்டல் ஏற்படலாம். மேலும் காபி குடிப்பதால் அடிக்கடி உங்களை அதிகமாக மலம் கழிக்க வைக்கும்.

வறுத்த உணவுகள்

    எண்ணெயில் வறுத்த உணவுகள் அசிடிட்டியை ஏற்படுத்தலாம். மேலும் அவற்றில் சேர்க்கப்படும் உப்பு உடலில் நீரிழப்பை ஏற்படுத்தும்.

ஆப்பிள்

    ஆப்பிள்களில் உள்ள அதிக நார்ச்சத்து அவற்றை ஜீரணிக்க கடினமாக்குகிறது. இதன் விளைவாக வாயு, மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.

மதுபானம்

    விமானத்தில் பயணிக்கும் முன் மது அருந்தக்கூடாது. அதிக உயரத்தில் பறக்கும் போது உங்கள் உடலை மது எதிர்மறையாக பாதிக்கும். இதனால் உங்கள் உடல் கட்டுப்பாடின்றி செயல்படும்.

கார்பனேற்றப்பட்ட பானங்கள்

    குளிர்பானங்கள் மற்றும் சோடாக்கள் போன்ற கார்பனேற்றப்பட்ட பானங்களில் உள்ள கார்பன் டை ஆக்சைடு மற்றும் சர்க்கரை நெஞ்செரிச்சல் வாயுத்தொல்லையை ஏற்படுத்தும்.

பருப்பு வகைகள்

    பருப்பு வகைகளில் புரதம் மற்றும் தாதுக்கள் நிறைந்திருந்தாலும் அவற்றில் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. இதனால் விமான பயணத்தின் போது வாயு மற்றும் அமிலத்தன்மை பிரச்னைகள் ஏற்படலாம்.