மைதாவில் செய்த உணவுகளை தினமும் சாப்பிட்டால் என்ன ஆகும்?
Alagar Raj AP
04-04-2025, 16:06 IST
www.herzindagi.com
மைதா மாவு
கோதுமையில் இருந்து உமியை நீக்கிவிட்டு தவிடுடன் தயாரிக்கப்படும் மாவு கோதுமை மாவு. அதுவே கோதுமையின் தவிடை நீக்கி மிகவும் மிருதுவாக அரைத்து தயாரிக்கப்படுவது தான் மைதா மாவு.
மைதா உணவுகள்
சுவை மற்றும் பதம் காரணமாக பரோட்டா, பப்ஸ், பிரட், நூடுல்ஸ், பாஸ்தா, கேக்குகள் என பல உணவுகளில் மைதா மாவு பயன்படுத்தப்படுகிறது. இதனால் தினமும் ஏதாவது ஒரு உணவின் மூலம் மைதா மாவை நாம் உட்கொள்கிறோம்.
மைதாவின் பக்க விளைவுகள்
மைதா உணவுகள் சுவையாக இருக்கும் ஆனால், அது உடல் நலத்திற்கு நல்லதல்ல. மைதா மாவால் செய்யப்பட்ட உணவுகளை தினமும் சாப்பிட்டால் சில உடல்நல பிரச்சனைகள் காலப்போக்கில் ஏற்படும்.
கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்
மைதா மாவு உடலில் LDL எனப்படும் கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிக்க செய்யும். இதன் விளைவாக இதய நோய், இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக பிரச்சினைகள் போன்ற நோய்களுக்கு ஆளாக நேரிடும்.
எலும்புகள் பலவீனமாகும்
மைதா மிகவும் அமிலத்தன்மை கொண்ட உணவு என்பதால் அதை அதிகமாக உட்கொள்ளும் போது, அந்த அமிலங்கள் எலும்புகளில் உள்ள கால்சியத்தை குறைக்கும். இதனால் காலப்போக்கில் எலும்புகள் பலவீனமடையும்.
சர்க்கரை நோய்
அதிக கிளைசெமிக் குறியீட்டு கொண்ட உணவுகளில் மைதாவும் ஒன்று. இதன் காரணமாக மைதா இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரிக்கும். அதனால் தொடர்ச்சியாக மைதா மாவில் செய்ப்பட்ட உணவுகளை சாப்பிடுவது டைப் 2 சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும்.
நோயெதிர்ப்பு சக்தி குறையும்
மைதாவில் எந்தவொரு ஊட்டச்சத்துக்களும் கிடையாது என்பதால் இதை சாப்பிடுவதால் உடலுக்கு எந்த ஊட்டச்சத்துகளும் கிடைக்காது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைந்து கடுமையான நோய்களுக்கு ஆளாக நேரிடும்.
செரிமான பிரச்சனைகள்
மற்ற மாவுகளில் நார்ச்சத்து இருக்கும் ஆனால், மைதா மாவில் நார்ச்சத்து இருக்காது. நார்ச்சத்து இல்லாததால் செரிமான உறுப்புகள் மைதா உணவுகளை ஜீரணிக்க அதிக சிரமப்படும்.