ஆயுர்வேத மருத்துவத்தில், அஸ்வகந்தா சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம், சர்க்கரை அளவை குறைக்கும், தூக்கத்தை மேம்படுத்தும், பாலியல் ரீதியான திறன்களை அதிகரிக்கும், மூளை செயல்பாடு மற்றும் பலவற்றிற்கு தனித்துவமான நன்மைகளை வழங்குகிறது.
பாலில் சேர்க்கலாம்
இரவு படுக்கைக்கு செல்லும் முன் ஒரு கிளாஸ் பாலில் 1 டீஸ்பூன் அஸ்வகந்தாவை கலந்து குடிக்கலாம். இது உங்கள் அழுத்தத்தை குறைத்து விரைவாக தூங்க செய்யும்.
ஓட்ஸ் அல்லது தயிருடன்
ஒரு பவுல் ஓட்ஸ் அல்லது தயிருடன் 1 டீஸ்பூன் அஸ்வகந்தாவை கலந்து காலையில் சாப்பிடலாம். இது உங்கள் நாளுக்கு புத்துணர்ச்சியும், ஆற்றலையும் வழங்கும்.
அஸ்வகந்தா கேப்ஸ்யூல்
அஸ்வகந்தாவை பொடியாக எடுத்துக் கொள்ள நேரம் இல்லாதவர்கள் அஸ்வகந்தா கேப்ஸ்யூல் எடுத்துக் கொள்ளலாம். தினசரி காலை மற்றும் மாலையில் 1 கேப்ஸ்யூல் எடுத்துக் கொண்டால் போதுமானது.
சூடான பானத்துடன் குடிக்கலாம்
டீ, காபி போன்ற சூடான பானத்தில் 1 டீஸ்பூன் அஸ்வகந்தாவை கலந்து குடிக்கலாம். இது உங்கள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.
நெய் அல்லது தேனுடன்
ஒரு நாளைக்கு இரு முறை நெய் அல்லது தேனுடன் 1 கிளாஸ் தண்ணீர் மற்றும் 1 டீஸ்பூன் அஸ்வகந்தாவை கலந்து உட் கொண்டால் விந்தணுக்களின் தரம் மேம்படும்.
ஸ்மூத்தியில் சேர்க்கலாம்
உங்கள் உடற்பயிற்சிக்கு முன் அல்லது பின் நீங்கள் குடிக்கும் ஸ்மூத்தியில் 1 டீஸ்பூன் அஸ்வகந்தாவை கலந்து குடித்தால் உங்கள் செயல்திறனை அதிகரிக்கவும் தசை வளர்ச்சிக்கு உதவும்.