ஒரு மாதம் சர்க்கரை உணவுகளை சாப்பிடாமல் இருந்தால் என்ன ஆகும் தெரியுமா?
Alagar Raj AP
28-03-2024, 16:51 IST
www.herzindagi.com
குளிர்பானங்கள், டீ, பிஸ்கட், ஜூஸ் போன்றவற்றை உட்கொள்வதன் மூலம் சர்க்கரை நம் உடலில் நுழைகிறது. நாம் அதிகம் சர்க்கரையை எடுத்துக் கொள்வதால் உடல் பருமன், நீரிழிவு, இதய நோய் போன்ற உடல் பாதிப்புகள் ஏற்படும். இந்நிலையில் ஒரு மாதம் சர்க்கரை உட்கொள்வதை நிறுத்தினால் என்ன ஆகும் என்பதை பார்ப்போம்.
உடல் எடை குறையும்
சர்க்கரை உணவுகளை ஒரு மாதத்திற்கு நீக்கினால் உடலில் சேரும் அதிகப்படியான கலோரிகள் குறைந்து உடல் எடை குறையும்.
சரும பிரச்சனை நீங்கும்
அதிக சர்க்கரை சாப்பிடுவதால் சிலருக்கு முகப்பரு உள்ளிட்ட பல்வேறு சரும பிரச்சனைகள் இருக்கும். எனவே சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால் சரும பிரச்சனைகள் குணமாகும்.
பல் ஆரோக்கியம்
சர்க்கரை உணவுகளை தவிர்ப்பது பல, ஈறு ஆரோக்கியத்திற்கு நல்லது. வாய் சம்பந்தப்பட்ட நோய்களின் பாதிப்பதை தடுக்க முடியும்.
நீரிழிவு ஆபத்து குறையும்
நீங்கள் ஒரு மாதம் சர்க்கரைக்கு விடுமுறை கொடுத்தால் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தி இன்சுலின் எதிர்ப்பு மற்றும் வகை 2 நீரிழிவு அபாயத்தை குறைக்கும்.
மன ஆரோக்கியம்
சர்க்கரை உட்கொள்வதை நிறுத்துவதால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். இதனால் மனநிலை மாற்றங்கள் உட்பட மனம் தொடர்பான பிற சிக்கல்கள் குறையும்.
பசி குறையும்
உடலில் அதிக சர்க்கரை சேருவதால் அடிக்கடி பசி எடுக்கும். சர்க்கரை உணவுகளை சாப்பிடுவதை குறைத்தால் பசியும் குறையும்.