கறிவேப்பிலை சாப்பிட்டால் நம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!


Staff Writer
04-03-2024, 12:37 IST
www.herzindagi.com

    தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக கறிவேப்பிலை சாப்பிடுங்கள்.

தொப்பை குறையும்

    தினமும் காலை வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் நீங்கி தொப்பை குறையும்.

இரத்த சோகை குணமாகும்

    வெறும் வயிற்றில் கறிவேப்பிலையுடன் சேர்த்து இரண்டு பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் நம் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து ரத்த சோகை சரியாகும்.

சர்க்கரை நோய்க்கு நல்லது

    சர்க்கரை நோயாளிகள் வெறும் வயிற்றில் கறிவேப்பிலையை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.

இதய ஆரோக்கியம்

    வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து, நல்ல கொழுப்புகளை அதிகரித்து இதய நோய் ஏற்படாமல் பாதுகாக்கும்.

உணவு செரிமானம் சீராகும்

    செரிமான பிரச்சனை உள்ளவர்கள் வெறும் வயிற்றில் கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டு வந்தால் உணவு செரிமானம் சீராகும்.

தலைமுடி ஆரோக்கியம்

    முடி உதிர்வு பிரச்சனை உள்ளவர்கள் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை தினமும் காலை சாப்பிட்டு வந்தால் முடி உதிர்வு பிரச்சனை குணமாகி அடர்த்தியாக முடி வளரும்.