சாப்பிட்ட பிறகு வாயில் வெற்றிலையை போட்டு மெல்லுவதன் நன்மைகள்
Alagar Raj AP
14-10-2024, 12:45 IST
www.herzindagi.com
இந்திய உணவு கலாச்சாரத்தில் சாப்பிட்ட பிறகு வாயில் வெற்றிலை போட்டு மெல்லும் பாரம்பரியம் உள்ளது. ஆயுர்வேதத்தின்படி அதற்கு பின்னால் உள்ள மருத்துவ பலன்களை இந்த பதிவில் பார்ப்போம்.
செரிமானத்தை மேம்படுத்தும்
வெற்றிலையின் கார்மினேடிவ், வாயு எதிர்ப்பு மற்றும் குடலைப் பாதுகாக்க உதவும் பண்புகள் உள்ளது. மேலும் வெற்றிலை வாயில் உமிழ்நீர் சுரப்பை அதிகரிக்கும் என்பதால் அது உணவு செரிமானத்திற்கும் உதவுகிறது.
வாய் நாற்றத்தை போக்கும்
வெற்றிலையில் அதிகம் காணப்படும் ஆண்டிமைக்ரோபியல் ஏஜென்ட்ஸ் வாய் துர்நாற்றத்திற்கு காரணமாக உள்ள பாக்டீரியா மற்றும் பிற பொருட்களை அழிக்கும்.
நீரிழிவை சீராக்கும்
டைப் 2 நீரிழிவு நோயாளிகள் வெற்றிலை சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவை சீராக்க முடியும் என்று பல ஆய்வுகள் மூலம் வெளிப்படுகிறது.
மனநிலை மேம்படும்
வெற்றிலையில் உள்ள மயக்க பண்புகள் மன அழுத்தத்தையும், பதட்டத்தையும் குறைத்து அமைதியான மனநிலையை மேம்படுத்தும்.
கொலஸ்ட்ராலை குறைக்கும்
வெற்றிலையில் உள்ள யூஜினோல் எனப்படும் ரசாயன கலவை உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கவும், நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும் உணவு மூலம் குடல் கொழுப்பை உறிஞ்சுவதையும் குறைக்கிறது.
எடை இழப்புக்கு உதவும்
வெற்றிலை வளர்சிதை மாற்றத்தை தூண்டுவதோடு பசியை குறைக்கிறது. கூடுதலாக, இதில் உள்ள நார்ச்சத்து வயிறு நிரம்பிய உணர்வை தரும். இது உடல் எடையை குறைக்க முயற்சிப்போருக்கு பயனுள்ளதாக இருக்கும்.