கிரீன் டீ குடிக்கும் போது இந்த 6 தவறுகளை செய்யாதீங்க


Alagar Raj AP
18-11-2024, 19:04 IST
www.herzindagi.com

    உடல் எடையை குறைக்கும் முயற்சியில் மற்றும் ஆரோக்கியமான உடல் நிலையை பராமரிக்க பலர் கிரீன் டீயை அருந்துகின்றனர். ஆனால் கிரீன் டீயை அருந்தும் போது செய்யும் சில தவறுகள் உடல் நிலையை பாதிக்கும். எனவே கிரீன் டீ குடிக்கும் போது தவிர்க்க வேண்டிய சில தவறுகளை பார்ப்போம்.

சர்க்கரையை தவிர்க்கவும்

    கிரீன் டீயின் கசப்பு தன்மை காரணமாக சிலர் அதில் சர்க்கரை கலந்து குடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். கிரீன் டீயில் சர்க்கரை கலப்பது உடல் எடை இழப்புக்கு பயனளிக்காது. ஆனால் கிரீன் டீயின் கசப்பு தன்மையை போக்க சிறிதளவு தேன் சேர்த்துக் கொள்ளலாம்.

வெறும் வயிற்றில் தவிர்க்கவும்

    காலையில் வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிப்பது செரிமான பிரச்சனைக்கு வழிவகுக்கும். எனவே காலையில் வெறும் வயிற்றில் க்ரீன் டீ குடிப்பதை விட உணவு சாப்பிட்ட பிறகு குடிப்பது நல்லது.

சூடாக குடிப்பதை தவிர்க்கவும்

    கிரீன் டீயை சூடான நீரில் கலப்பதால் அதில் உள்ள சத்துக்கள் அழிந்து விடும், செரிமான பிரச்சனைகள் ஏற்படும் மற்றும் கசப்பு தன்மை அதிகரிக்கும். எனவே கிரீன் டீயை சூடான நீரில் கலந்து குடிப்பதை தவிர்க்கவும்.

உணவுக்கு பிறகு

    உணவுக்கு பிறகு உடனே கிரீன் டீ குடிப்பதால் உணவில் உள்ள இரும்புச் சத்து உறிஞ்சப்படுவதில் இடையூறு ஏற்பட்டு, நாளடைவில் இரத்த சோகை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உணவுக்கு பிறகு 1 மணி நேரத்திற்கு பிறகு கிரீன் டீ குடிக்கவும்.

இரவில் தவிர்க்கவும்

    கிரீன் டீயை இரவில் தூங்குவதற்கு முன் குடிப்பதால் தூக்கமின்மை, செரிமான பிரச்சனை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். எனவே மாலை நேரத்திற்கு பிறகு கிரீன் டீ குடிப்பதை தவிர்க்கவும்.

மருந்துகளுடன் தவிர்க்கவும்

    சில மருந்து, மாத்திரைகளை சாப்பிட பிறகு கிரீன் டீ குடிப்பதால் எதிர்வினை தொடர்பு உண்டாகும். ஆகையால் நீங்கள் மருந்து, மாத்திரை எடுத்துக் கொள்பவராக இருந்தால் மருத்துவரின் ஆலோசனையை பெற்று கிரீன் டீ குடியுங்கள்.