எலுமிச்சை இலை தரும் அற்புத நன்மைகள்


Alagar Raj AP
19-02-2025, 22:58 IST
www.herzindagi.com

எலுமிச்சை இலை நன்மைகள்

    எலுமிச்சைகளை போலவே அதன் இலைகளிலும் பல மருத்துவ குணங்கள் உள்ளன. அவை நம் அன்றாட சந்திக்கும் சில உடல்நல பிரச்சனைகளை தீர்க்கும் வல்லமை உடையது.

தலைவலி நீங்கும்

    எலுமிச்சை இலைகளிலிருந்து சாற்றைப் பிழிந்து அதன் நறுமணத்தை முகர்ந்தால், தலைவலியில் இருந்து தற்காலிக நிவாரணம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

வாய்வழி சுகாதாரம்

    எலுமிச்சை இலைகள் கலந்த தண்ணீரில் வாய் கொப்பளித்தால் வாய்வழி சுகாதாரம் மேம்படும். எலுமிச்சை இலைகளில் உள்ள ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் ஈறுகள் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் வாய் துர்நாற்றத்தை போக்கும்.

உடல் எடை குறையும்

    எலுமிச்சை இலை சாற்றை வெதுவெதுப்பான நீர் மற்றும் தேனுடன் கலந்து உட்கொள்வதால் செரிமானம் மேம்படும். இதனால் உடலில் கலோரிகள் அதிகரிக்காது, உடல் எடையும் குறைய உதவும்.

நோயெதிர்ப்பு சக்தி

    எலுமிச்சைகளை போலவே அதன் இலைகளிலும் வைட்டமின் சி உள்ளது. இது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

சிறுநீரக ஆரோக்கியம்

    சிறுநீரக கற்களை போக்க எலுமிச்சை இலை உதவுகிறது. எலுமிச்சை இலைகளில் உள்ள சிட்ரிக் அமிலம் சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதைத் தடுக்கும். இதை சாறு அல்லது எலுமிச்சை இலை தேநீராக குடிக்கலாம்.

சரும ஆரோக்கியம்

    முகப்பரு, சுருக்கங்கள் போன்ற சரும பிரச்சனைகளுக்கு எலுமிச்சை இலை தீர்வளிக்கிறது. இதில் உள்ள வைட்டமின் சி சரும பொலிவை அதிகரிக்கும். எலுமிச்சை இலைகளை பேஸ்ட் போல் அரைத்து முகத்தில் பயன்படுத்தலாம்.