உணவின் சுவை மற்றும் நறுமணத்தை இரட்டிப்பாக்க பயன்படுத்தப்படும் கறிவேப்பிலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் ஒளிந்திருக்கிறது. கறிவேப்பிலையை அரைத்து சாறாக குடித்தால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
இதய ஆரோக்கியம்
கறிவேப்பிலை சாறு குடிப்பதால் இதய நோய்களை தடுக்க முடியும். கறிவேப்பிலையில் உள்ள ருடின் மற்றும் டானின்போன்ற கலவைகள் கொலஸ்ட்ராலை குறைத்து இதயத்தை பாதுகாக்கிறது.
கண் ஆரோக்கியம்
கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வைட்டமின் ஏ கறிவேப்பிலையில் உள்ளது. கறிவேப்பிலை சாற்றை தொடர்ந்து குடித்து வந்தால் வயதாவதால் ஏற்படும் பார்வை குறைபாட்டை தடுக்க முடியும்.
நோயெதிர்ப்பு சக்தி
நோய்த்தொற்றுகளால் பாதிக்காமல் இருக்க கறிவேப்பிலை சாறு குடிக்கலாம். கறிவேப்பிலையில் உள்ள ஏ, பி, சி, ஈ வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
இரத்த சர்க்கரை அளவு
தினமும் காலை வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாறு குடிப்பது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். கறிவேப்பிலையில் நிறைந்துள்ள நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.
எலும்பு ஆரோக்கியம்
கறிவேப்பிலையில் நிறைந்துள்ள கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தினம் கறிவேப்பிலை சாறு குடித்து வர மூட்டுவலி குறையும்.
முடி ஆரோக்கியம்
கறிவேப்பிலையில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் புரோட்டீன்கள் வேர்களை வலுவாக்கி முடி உதிர்வதை தடுக்கிறது.
கறிவேப்பிலை சாறு செய்முறை
2 கப் தண்ணீரில் 1 கிண்ணம் அளவிலான கறிவேப்பிலையை சேர்த்து கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்றாக கொதித்து வற்ற தொடங்கியதும் அடுப்பில் இருந்து எடுத்து வடிகட்டவும். இறுதியாக கறிவேப்பிலை சாற்றில் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம்.