தூக்கமின்மை, நீரிழப்பு, மன அழுத்தம், அதிக சத்தம் போன்ற பல காரணிகளால் தலைவலி ஏற்படுகிறது. காரணம் எதுவாக இருந்தாலும் தலைவலிக்கும் போது இந்த 6 உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். ஏனெனில் இந்த உணவுகள் தலைவலியை மேலும் மோசமாக்கும்.
ஊறுகாய்
ஊறுகாய் போன்ற புளித்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் டைரமைன் என்ற ஒரு இயற்கையான சேர்மம் காணப்படும். இது மூளையில் உள்ள இரத்த நாளங்களை சுருக்கி, பின்னர் விரைவாக விரிவடையச் செய்யும் போது தலைவலி ஏற்படும்.
சிட்ரஸ் பழங்கள்
ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் காணப்படும் ஆக்டோபமைன் என்ற கலவை தலைவலியை தூண்டும். அதனால் தலைவலி இருக்கும் போது சிட்ரஸ் பழங்களை தவிக்கவும்.
காஃபின்
காஃபின் பானங்களை அதிகம் குடித்தால் தலைவலி அதிகரிக்கும். காஃபின் மூளையின் இரத்த நாளங்களில் ஏற்படுத்தும் தாக்கத்தால் தலைவலிக்கும். அதனால் காஃபின் பானங்களை கொஞ்சமாக குடிக்கவும்.
சாக்லேட்
சாக்லேட்டில் உள்ள ஃபைனிலெதிலமைனின் என்ற சேர்மம் நமது மூளையின் இரசாயணங்களை பாதிக்கும். இதனால் சாக்லேட் சாப்பிடுவதும் தலைவலிக்கு காரணமாக அமையும்.
ஆல்கஹால்
ஆல்கஹாலில் காணப்படும் டைரமைன் மற்றும் ஹிஸ்டமைன் என்ற இரண்டு சேர்மங்கள் இது தலைவலியை மோசமாக்கும். மேலும் ஆல்கஹால் உடலில் நீரிழப்பை ஏற்படுத்தும் என்பதால், இதன் காரணமாகவும் தலைவலி ஏற்படும்.
செயற்கை இனிப்புகள்
குளிர்பானங்கள், மிட்டாய்கள் போன்ற செயற்கை இனிப்புகள் சேர்க்கப்பட்ட உணவுகள் தலைவலியை தூண்டும். அதனால் தலைவலி இருக்கும் போது செயற்கை இனிப்புகள் சேர்க்கப்பட்ட உணவுகளை சாப்பிடாதீர்கள்.