இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க, இந்த 6 உணவுகளை சாப்பிடுங்க!


Shobana Vigneshwar
21-09-2023, 22:00 IST
www.herzindagi.com

ஹீமோகுளோபின் அதிகரிக்க உணவு

    இரத்த சிவப்பணுக்களில் காணப்படும் ஒரு முக்கிய புரதமான ஹீமோகுளோபின், உடல் உறுப்புகளுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினை அதிகரிக்க பின்வரும் உணவுகளை சாப்பிடலாம்…

Image Credit : freepik

ட்ரை ஃப்ரூட்ஸ்

    பேரிச்சம்பழம், திராட்சை, ஆப்பிரிகாட் போன்ற ட்ரை ஃப்ரூட்ஸ் வகைகளில் இரும்புச்சத்து, ஃபோலேட் உட்பட பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. இவை ஹீமோகுளோபின் அளவுகளை இயற்கையாக அதிகரிக்க உதவுகின்றன.

Image Credit : freepik

டோஃபு சாப்பிடலாம்

    சோயா பாலிலிருந்து தயாரிக்கப்படும் இந்தப் பன்னீரானது சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு ஏற்றது. இதில் நிறைந்துள்ள இரும்புச்சத்து ஹீமோகுளோபின் அளவுகளை அதிகரிக்க உதவும்.

Image Credit : freepik

சத்துக்கள் நிறைந்த பீட்ரூட்

    இந்த வேர் காய்கறியில் இரும்புச் சத்து, ஃபோலேட், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. பீட்ரூட் சாப்பிடுவது ஹீமோகுளோபினை அதிகரிப்பதோடு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கும் அதிக நன்மைகளை தருகிறது.

Image Credit : freepik

ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முட்டை

    முட்டையில் நிறைந்துள்ள இரும்புச் சத்து, வைட்டமின் B12, அமினோ அமிலங்கள், துத்தநாகம் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ஹீமோகுளோபின் அளவுகளை பராமரிக்கவும் உதவுகின்றன.

Image Credit : freepik

நட்ஸ் மற்றும் விதைகள்

    பூசணி விதை, சூரியகாந்தி விதை, பாதாம், முந்திரி போன்ற நட்ஸ் மற்றும் விதைகளில் வைட்டமின் E, ஃபோலிட், இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. இவை ஹீமோகுளோபினை அதிகரிக்க சிறந்தது.

Image Credit : freepik

பயறு மற்றும் பருப்பு வகைகள்

    பீன்ஸ், பருப்பு மற்றும் பயறு வகைகளில் புரதம், இரும்புச்சத்து, ஃபோலேட் போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க தினமும் ஒரு பயறு மற்றும் பருப்பு வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

Image Credit : freepik

படித்ததற்கு நன்றி

    இந்த தகவல் பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Image Credit : freepik