கோடை காலத்தில் மக்கள் கடற்கரைக்கு செல்வது போல் தற்போது பருவமழையை அனுபவிக்க கடற்கரைக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அப்படி மழைக்காலத்தில் கடற்கரைக்கு செல்வோர் செய்யக்கூடாத விஷயங்கள் குறித்து பார்ப்போம்.
கடலில் குளிக்க கூடாது
மழைக்காலத்தில் வழக்கத்தை விட கடல் அலைகள் ஆக்ரோஷமாக காணப்படும் என்பதால் கடலில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.
படகு சவாரியை தவிர்க்கவும்
மழைக்காலத்தில் வீசும் சூறைக்காற்று காரணமாக கடல் நீரோட்டங்கள் வலுவாக இருக்கும். அதில் படகு சவாரி செய்வது ஆபத்தில் முடிய வாய்ப்புள்ளது என்பதால் படகு சவாரியை தவிர்ப்பது நல்லது.
பாறைகளில் ஏற வேண்டாம்
மழை காரணமாக கடற்கரைகளில் உள்ள பாறைகள் பாசி படர்ந்து வழுக்கும் நிலையில் இருக்கும் மற்றும் உயரமான கடல் அலைகள் உங்களை உள்ளே இழுத்து செல்லும் என்பதால் பாறைகளில் ஏறாமல் இருப்பது நல்லது.
இடி, மின்னலில் இருந்து பாதுகாப்பு
இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் கடற்கரைக்கு செல்வது பாதுகாப்பானது அல்ல. ஒருவேளை கடற்கரையில் இருக்கும் போது இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தால் அங்கிருந்து உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும்.
குழந்தைகளை பாதுகாக்கவும்
மழைக்காலத்தில் கடல் அலைகள் கரைக்குள் அதிக தூரம் வரும். எனவே கடற்கரையில் குழந்தைகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். குழந்தைகளை தண்ணீருக்குள் அருகே செல்ல அனுமதிக்காதீர்.
நீர் விளையாட்டுகளில் ஈடுபடாதீர்
மழை காலத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் ஜெட் ஸ்கீயிங், பாராசெய்லிங் போன்ற நீர் விளையாட்டுகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.