சேலையில் அசர வைக்கும் நடிகை பவானி ஸ்ரீ-யின் க்யூட்டான போட்டோஸ்!


Alagar Raj AP
31-03-2024, 13:00 IST
www.herzindagi.com

பவானி ஸ்ரீ

    ஜிவி பிரகாஷ் உடன் பிறந்த தங்கையும், ஏ.ஆர்.ரஹ்மானின் மருமகளுமான பவானி ஸ்ரீ விடுதலை படத்தில் தமிழரசி எனும் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்.

உதவி இயக்குநர்

    இவரின் முதல் படமான க.பெ.ரணசிங்கம் படத்தில் நடிப்பதற்கு முன்பு இது என்ன மாயம், சில சமயங்களில் ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

இணைய தொடர்கள்

    பாவ கதைகள் அந்தாலஜி தொடர், தெலுங்கில் ஹை ப்ரிஸ்ட்ஸ் எனும் இணைய தொடர் மற்றும் கன்னட்டி எனும் ஆல்பம் பாடலில் நடித்துள்ளார்.

பாடகி பவானி

    இசைக் குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் பவானிக்கு இயல்பாகவே பாடும் திறமையும் உள்ளது. புத்தம் புது காலை படத்தில் 3 பாடல்களையும், ஹிந்தியில் ஒரு ஆல்பம் பாடலையும் பாடியுள்ளார்.

அடுத்த படங்கள்

    இவரின் நடிப்பின் அடுத்தாக நண்பன் ஒருவன் வந்த பிறகு எனும் படம் வெளியாக உள்ளது. விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார்.

போட்டோஷூட்

    அதிகம் போட்டோஷூட் செய்வதை வழக்கமாக வைத்திருக்கும் பவானி ஸ்ரீ. சேலையில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் அதிகம் பதிவிட்டு வருகிறார்.

பிளாஸ்டிக் சர்ஜரி

    இவர் சமீபத்தில் பதிவிட்ட புகைப்படங்களை பார்த்து முகத்தில் மாறுதல் இருப்பதை கவனித்த ரசிகர்கள் பவானி ஸ்ரீ பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருப்பதாக கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.