கமல் மீதான கன்னாபின்னா காதல் முறிய இது தான் காரணம்


Alagar Raj AP
02-01-2024, 13:56 IST
www.herzindagi.com

    80's, 90's காலகட்டத்தில் கமல் மற்றும் ஸ்ரீவித்யா இணைந்து குணா, புன்னகை மன்னன், அபூர்வ ராகங்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளனர்.

கமலின் முதல் காதல்

    கமலின் முதல் மனைவியான வாணி கணபதியை காதலிப்பதற்கு முன்பே கமலும் ஸ்ரீவித்யாவும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் இணைந்து நடித்த காலகட்டத்தில் காதல் மலர்ந்துள்ளது. ஸ்ரீவித்யாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கமல் உறுதியாக இருந்தார்.

காதலுக்கு தடை

    இருவரும் காதலிப்பது குறித்து அன்றைய காலத்தில் ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டது. இது ஸ்ரீவித்யாவின் தாய்க்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

அழைத்து பேசிய ஸ்ரீவித்யாவின் தாய்

    'என் மகள் பெரிய நடிகையாக வரவேண்டியவள் இதனால் என் மகளை திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தை கைவிடு' என கமல்ஹாசனை அழைத்து ஸ்ரீவித்யாவின் தாய் பேசினார்.

வீட்டை விட்டு ஓடி திருமணம்?

    இதனால் ஆத்திரமடைந்த கமல், ஸ்ரீவித்யாவை வீட்டை விட்டு ஓடி சென்று திருமணம் செய்து கொள்ளவோம் என கூறியுள்ளார்.

முடிவுக்கு வந்த முதல் காதல்

    'என் அம்மாவின் பேச்சை மீறி என்னால் எதுவும் செய்ய முடியாது' என ஸ்ரீவித்யா கூற அவரின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து கமல் ஸ்ரீவித்யாவை பிரிந்தார்.

இறுதி காலத்தில் சந்தித்த கமல்

    ஸ்ரீவித்யா நோய்வாய்ப்பட்டு இருந்த நிலையில் அவர் மறைவுக்கு முன் கமல் நேரில் சென்று பார்த்தது திரைத்துறையில் அன்றைய காலத்தில் அதிகம் பேசப்பட்டது. காதல் முறிவு குறித்து ஸ்ரீவித்யா பேசிய நேர்காணல் தற்போது வைரல்.