மெஹந்தி டு பானி பூரி நினைவுகளை பகிர்ந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்


Alagar Raj AP
01-02-2024, 13:00 IST
www.herzindagi.com

    ஜனவரி மாதத்தில் தான் சந்தித்த நிகழ்வுகள், சென்ற இடம், மறக்க முடியாத நிகழ்வுகளை புரிந்துள்ளார் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

இந்த முறை மெஹந்தி...

    தான் மெஹந்தியை விரும்பும் ஒரு பெண்ணாக இருந்தாலும் படப்பிடிப்புகளுக்கு இடையில் மெஹந்தி போட முடியாமல் போகிறது அனால் இந்த முறை அப்படி இல்லை, என ஒரு திருமண நிகழ்வில் மெஹந்தி போட்டுக் கொண்டார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

மீண்டும் பள்ளிக்கு சென்ற ஷ்ரத்தா

    தெலுங்கானாவின் செகந்திராபாத்தில் தான் 12ம் வகுப்பு படித்த பள்ளிக்கு சென்றார் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். தன் இன்ஸ்டாகிராம் ப்ளூ டிக்கை காட்டியும் பள்ளி பாதுகாவலர் தன்னை உள்ளே அனுமதிக்கவில்லை என வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார்.

தொலைந்த ஏர்பாட்கள்

    விசாகப்பட்டினத்தில் தான் இழந்த ஏர்பாட்களை மீண்டும் கண்டுபிடித்து விட்டேன் என மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

அப்பாவின் நினைவுகள்

    குடியரசு தின அணிவகுப்பை தொலைக்காட்சியில் கண்ட ஷ்ரத்தா ஸ்ரீநாத் ராணுவ வீரரான தன் தந்தையின் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்டதை நினைவு கூர்ந்துள்ளார்.

பூக்களுடன் விளையாட்டு

    நண்பரின் திருமணத்தின் போது ஒரு குழந்தை பூக்களுடன் விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்து என் இதயம் நெகிழ்ந்தது என குறிப்பிட்டுள்ளார்.

பானி பூரி

    பானி பூரியின் சுவை உங்களை ஆழமாக தாக்கும் என சாலையோர கடையில் பானி பூரி சாப்பிட்டதை பகிர்ந்துள்ளார்.