ஹோட்டலில் தோழிகளுடன் குதூகலமாக பேச்சுலர் பார்ட்டி கொண்டாடிய மேகா ஆகாஷ்


Alagar Raj AP
04-09-2024, 15:00 IST
www.herzindagi.com

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மகனுடன் திருமணம் நிச்சயக்கப்பட்ட நடிகை மேகா ஆகாஷ் இலங்கையில் தோழிகளுடன் பேச்சுலர் பார்ட்டி கொண்டாடியுள்ளார்.

    தமிழ் மற்றும் தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் மேகா ஆகாஷ் பேட்ட, என்னை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றார்.

    மேகா ஆக்ஸுக்கு சாய் விஷ்ணு என்பவருடன் திருமணம் நிச்சயக்கப்பட்ட புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலானது.

    மேகா ஆகாஷும் சாய் விஷ்ணுவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மேகா ஆகாஷ் தன் நெருங்கிய தோழிகளுடன் இலங்கையில் ஹோட்டல் ஒன்றில் பேச்சுலர் பார்ட்டியை ஜோராக கொண்டாடியுள்ளார்.

    மேகா ஆகாஷ் சாய் விஷ்ணு திருமணம் வருகிற செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான திருநாவுக்கரசரின் 2வது மகன் தான் சாய் விஷ்ணு. இவர் காலா மற்றும் கபாலி ஆகிய படங்களில் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.