லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிடம் தமிழில் தனி ஒருவன் 2, குட் பேட் அக்லி உள்ளிட்ட 6 படங்களும், மலையாளத்தில் 2 படம், கன்னடத்தில் 1 படம் என மொத்தம் 9 படங்கள் கைவசம் உள்ளது.
ஐஸ்வர்யா ராஜேஷ்
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள பல படங்களில் நடித்துள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கைவசம் தமிழில் 3 படம், மலையாளத்தில் 2 படம், கன்னடத்தில் 1 படம் என மொத்தம் 6 படம் கைவசம் உள்ளது.
திரிஷா
தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா விடாமுயற்சி, தக் லைஃப் என இதுவரை மொத்தம் 5 படங்களில் கமிட் ஆகியுள்ளார்.
ஆண்ட்ரியா ஜெரிமியா
கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்கும் ஆண்ட்ரியா ஜெரிமியாவின் கைவசம் தற்போது மொத்தம் 5 படங்கள் கைவசம் உள்ளது.
கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள 3 படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி தெறி படத்தின் இந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்திலும் நடித்துள்ளார். இந்த படம் டிசம்பர் 25 வெளியாகிறது.
அனுபமா பரமேஸ்வரன்
நடிகை அனுபமா பரமேஸ்வரனுக்கு தமிழில் பைசன், லாக்டவுன் ஆகிய படங்களும், மலையாளத்தில் இரண்டு படம், தெலுங்கில் ஒரு படமென மொத்தம் 5 படங்கள் கைவசம் உள்ளது.
சாய் பல்லவி
தமிழில் அமரன் படம், ஹிந்தியில் இரண்டு படம், தெலுங்கில் ஒரு படமென மொத்தம் 4 படங்கள் சாய் பல்லவி கைவசம் உள்ளது. இதில் அமரன் படம் இந்த ஆண்டு வெளியாகிறது.