தமிழ் சினிமாவின் எவர்கிரீன் அம்மாக்கள்!


Alagar Raj AP
11-05-2024, 20:00 IST
www.herzindagi.com

    பெரும்பாலான படங்களில் அம்மா கதாபாத்திரம் என்பது துணை கதாபாத்திரமாக இருந்தாலும் அந்த கதாபாத்திரத்திற்கு உண்மைத்தன்மை சேர்ப்பது என்பது சில நடிகைகளுக்கு கைவந்த கலை. அப்படி தமிழ் சினிமாவில் அம்மா கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகைகள் குறித்து காண்போம்.

சரண்யா பொன்வண்ணன்

    தமிழ் சினிமாவில் அம்மா என்று சொன்னதும் முதலில் ஞாபகத்திற்கு வருபவர் சரண்யா பொன்வண்ணன். ததற்போதுள்ள இளம் நடிகர்கள் முதல் ஸ்டார் நடிகர்கள் வரை அனைவரின் அம்மாவாக சரண்யா பொன்வண்ணன் நடித்துவிட்டார்.

ராதிகா சரத்குமார்

    சின்னத்திரைக்கு சித்தி என்றால் வெள்ளித்திரைக்கு அம்மா என்று ராதிகாவை கூறலாம். அப்படி தங்கமகன், தர்மதுரை, பூஜை, நானும் ரவுடிதான், தெறி, லவ் டுடே உள்ளிட்ட படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் ராதிகா.

ஊர்வசி

    பெண் கமல்ஹாசன் என்று சொல்லும் அளவிற்க்கு நடிப்பில் பன்முகத்தை வெளிப்படுத்துபவர் நடிகை ஊர்வசி. வாமனன், வேங்கை, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்களில் வெகுளியான அம்மாவாகவும், சூரரை போற்று, ஜே பேபி படத்தில் சீரியசான அம்மாவாகவும் நடித்து அசத்தியிருப்பார்.

கோவை சரளா

    தமிழ் சினிமாவின் சின்ன மனோரமா என அழைக்கப்படும் கோவை சரளா கதாநாயகி, காமெடி நடிகை, குணச்சித்திர கதாபாத்திரம் என தமிழில் கோவை சரளா ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என்று கூறலாம். அப்படி இவர் காஞ்சனா சீரியஸ் மற்றும் கொம்பன் ஆகிய படங்களில் அம்மாவாக நடித்திருப்பார்.

சுஜாதா சிவகுமார்

    சுஜாதா சிவகுமார் என்று இவரின் பெயரை சொன்னால் யாருக்கும் தெரியாது ஆனால் குரல் மற்றும் பேச்சு நடையை கேட்டதால் ஓ இவரா என்று சொல்லுவோம். இவர் பல பருதிவீரன், பசங்க, கேடி பில்லா கில்லாடி ரங்கா, காக்கி சட்டை உள்ளிட்ட படங்களில் ஹீரோ மற்றும் ஹீரோயின் அம்மாவாக நடித்துள்ளார்.

ரம்யா கிருஷ்ணன்

    பாகுபலி படத்தில் பாகுபலியின் அம்மா ராஜமாதா சிவகாமி தேவி கதாபாத்திரத்தை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது. அதற்கு நேரெதிராக சூப்பர் டீலக்ஸ் படத்தில் வித்தியாசமான அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ரம்யா கிருஷ்ணன்.

நதியா

    எம்.குமரன் சன் ஆஃப் மஹாலஷ்மி படத்தில் சிங்கிள் அம்மாவாக மகனை வளர்க்கும் தாய் கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடித்திருப்பார் நதியா.

கோலிவுட்டின் புது அம்மாக்கள்

    தற்போது சில ஆண்டுகளாக துளசி, ரமா, லிஸ்ஸி ஆண்டனி, கீதா கைலாசம், ஶ்ரீரஞ்சனி உள்ளிட்ட நடிகைகள் தமிழ் சினிமாவில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.