மஞ்சும்மல் பாய்ஸ் நடிகருக்கும் அபர்ணா தாஸுக்கும் திருமணம் முடிஞ்சு!


Alagar Raj AP
24-04-2024, 12:22 IST
www.herzindagi.com

அபர்ணா தாஸ்

    மலையாளத்தில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக இருப்பவர் அபர்ணா தாஸ். தமிழில் பீஸ்ட் படம் மூலம் அறிமுகமான இவர் டாடா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

அபர்ணா தாஸ் வெட்ஸ் தீபக் பரம்பொல்

    இந்நிலையில் அபர்ணா தாஸ் தன் நீண்ட நாள் காதலன் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் நடித்த நடிகர் தீபக் பரம்பொல் என்பவரை ஏப்ரல் 23 அன்று திருமணம் செய்துள்ளார்.

குருவாயூரில் திருமணம்

    இவர்களின் திருமணம் கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் நடைபெற்றது.

எளிமையான திருமணம்

    மிக எளிமையாக நடைபெற்ற இவர்களது திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

புகைப்படங்கள் வைரல்

    திருமணத்திற்கு முந்தைய நலங்கு வைக்கும் நிகழ்ச்சி புகைப்படங்கள் வைரலான நிலையில் தற்போது திருமண புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.

ரசிகர்கள் வாழ்த்து

    சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் புதுமண தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மனோஹரம் படத்தில் தொடங்கிய காதல்

    2019 மலையாளத்தில் வெளியான மனோஹரம் படத்தில் இணைந்து நடித்த போது இருவருக்கும் காதல் மலர்ந்து தற்போது திருமணம் பந்தத்தில் இணைந்துள்ளது.