சிரிக்கத் தொடங்கினால் நிறுத்த முடியாது.. அப்படி ஒரு நோயால் அவதிப்படும் அனுஷ்கா ஷெட்டி!


Alagar Raj AP
24-06-2024, 15:21 IST
www.herzindagi.com

    தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா ஷெட்டி, தான் சிரிப்பு கோளாறு எனும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

    பழைய நேர்காணல் ஒன்றில் தனக்கு சிரிப்பு கோளாறு எனும் பாதிப்பு உள்ளது என்று அனுஷ்கா ஷெட்டி தெரிவித்தது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

    நான் சிரிக்க ஆரம்பித்தால் 15-20 நிமிடங்கள் தொடர்ந்து சிரிப்பேன், என்னால் சிரிப்பை அடக்க முடியாது. சிரிப்பு கோளாறு காரணமாக பல படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது என்று நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

    நடிகை அனுஷ்கா ஷெட்டியின் இந்த பாதிப்பு அரிய வகை நோயான Pseudobulbar Effect என்று அறியப்படுகிறது.

    இது ஒருவகையான நரம்பியல் பிரச்சனை அல்லது தலையில் ஏற்படும் காயம் காரணமாக Pseudobulbar Effect பாதிப்பு ஏற்படலாம் என கூறப்படுகிறது.

    இந்த பாதிப்பு இருப்பவர்களுக்கு சிரிப்பு ஏற்பட்டால் அதை நிறுத்துவது கடினமான விஷயம். 10 - 15 நிமிடங்களுக்கு பிறகு சிரிப்பு படிப்படியாக குறையும்.

    சமீபத்தில் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் தனக்கு ADHD எனும் நோய் இருப்பதாக தெரிவித்த நிலையில் தற்போது அனுஷ்கா தனக்கு சிரிப்பு கோளாறு இருக்கிறது என்று கூறிய பழைய நேர்காணல் வைரலாகி உள்ளது.