அதே அழகு, அதே புன்னகை : புன்னகை அரசியின் புதிய கிளிக்ஸ்
Alagar Raj AP
03-01-2024, 15:56 IST
www.herzindagi.com
இயற்பெயர்
மும்பையில் பிறந்த நடிகை சினேகா துபாயில் வளர்ந்தார். தெலுங்கு குடும்பத்தை சேர்ந்த இவரின் இயற்பெயர் சுஹாசினி ராஜாராம் நாயுடு.
அறிமுகம்
‘இங்கனே ஒரு நிலாபக்ஷி’ எனும் மலையாள படம் மூலம் 2000ம் ஆண்டு திரைத்துறையில் சினேகா அறிமுகமானார்.
தமிழில் அறிமுகம்
மாதவன் கதாநாயகனாக நடித்து வெளியான என்னவளே படத்தின் மூலம் தமிழில் சினேகா கதாநாயகியாக அறிமுகமானார்.
விருது
பிரசாந்துக்கு ஜோடியாக நடித்த விரும்புகிறேன் படத்திற்காக மற்றும் கரு பழனியப்பன் இயக்கத்தில் வெளியான ‘பிரிவோம் சந்திப்போம்’ ஆகிய படங்களுக்கு சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு திரைப்பட விருது நடிகை சினேகாக்கு வழங்கப்பட்டுள்ளது.
காதல் திருமணம்
நடிகை சினேகா மற்றும் நடிகர் பிரசன்னா இருவரும் 2009 முதல் காதலித்து வந்த நிலையில் 2012ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
மாடல்
நடிகை சினேகா பக்கத்து வீட்டு பெண் போல் இருப்பதால் ஜவுளி கடைகள், நகை கடைகள், உணவு நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களின் மாடலாக நடிக்க நடிகை சினேகாக்கு வாய்ப்பு அதிகமாக கிடைத்தது.
23 ஆண்டுகளுக்கு பிறகு
2003ம் ஆண்டு வெளியான வசீகரா படத்திற்கு பிறகு 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜய்க்கு ஜோடியாக சினேகா நடித்துள்ளார். நடிகர் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கும் GOAT படத்தில் ஒரு கதாபாத்திரத்திற்கு ஜோடியாக சினேகா நடிக்கிறார்.