கவனம் ஈர்க்கும் சமந்தாவின் லேட்டஸ்ட் க்யூட் பிக்ஸ்!


Alagar Raj AP
05-11-2024, 16:29 IST
www.herzindagi.com

    நடிகை சமந்தாவின் சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

    தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக இருக்கும் சமந்தா தெலுங்கில் கௌதம் மேனன் இயக்கிய ‘யே மாய சேசாவே’ என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

    ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் சமந்தாவின் கதாபாத்திரமும், அவரது நடிப்பும் பாராட்டப்பட்டது.

    கடந்த ஆண்டு தெலுங்கில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான ‘குஷி’ படம் தோல்வி படமாக அமைந்தது.

    வருண் தவான் மற்றும் சமந்தா நடித்துள்ள 'சிட்டாடல் ஹனி பன்னி' என்ற வெப் சீரிஸ் நவம்பர் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    'நான் கடந்த காலங்களில் தவறு செய்துள்ளேன் ஒப்புக் கொள்கிறேன். சில விஷயங்கள் சரியாக அமையவில்லை' என சமீபத்திய திரைபடங்களின் தோல்விகள் குறித்து சமந்தா மனம் திறந்துள்ளார்.

    'உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடுமையான டயட்டை பின்பற்றி வருகிறேன். இது எனது உடலுக்கு தேவை. Live And Let Live. It's 2024' என்று உடல் எடையை கொஞ்சம் அதிகரிக்க கூறிய ரசிகருக்கு சமந்தா விளக்கமளித்துள்ளார்.

    இதனிடையே சமந்தா மலையாளத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அப்படி நடிக்கும் பட்சத்தில் அப்படம் சமந்தாவுக்கு முதல் மலையாள படமாக அமையும்.