பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக மாறிய ரம்யா பாண்டியன்!


Alagar Raj AP
03-05-2024, 13:33 IST
www.herzindagi.com

    டம்மி டப்பாசு எனும் படம் அறிமுகமான ரம்யா பாண்டியனுக்கு சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது வென்ற ஜோக்கர் படத்தில் மல்லிகா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றார்.

    இவர் நடிகர் அருண் பாண்டியனின் உடன் பிறந்த அண்ணன் மகள் ஆவார்.

    இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் அதன் பின் பட வாய்ப்புகள் அமையாததால் விஜய் டிவி பக்கம் கவனத்தை செலுத்த தொடங்கினார்.

    விஜய் டிவியில் குக் வித் கோமாளி, பிக் பாஸ் நிகழ்ச்சிகள் போட்டியாளராக சின்னத்திரையில் அதிக ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.

    வழக்கமாக வாரத்திற்கு 3 அல்லது 4 முறை விதவிதமாக போட்டோஷூட் செய்யும் ரம்யா பாண்டியன் இந்த முறை பாரதியாரின் கவிதை புத்தகத்தை வாசிப்பது போல் போட்டோஷூட் செய்துள்ளார்.

    இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள இந்த போட்டோக்கு பாரதியாரின் பெண் விடுதலை பாடலை தலைப்பாக குறிப்பிட்டுள்ளார்.