நாக சைதன்யா சோபிதா துலிபாலாவின் கலக்கலான கல்யாண போட்டோஸ்


Alagar Raj AP
05-12-2024, 16:09 IST
www.herzindagi.com

    நடிகர்கள் நாக சைதன்யா, சோபிதா துலிபாலா திருமணம் டிசம்பர் 4ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் கோலாகலமாக நடைபெற்றது.

    சமந்தாவுடனான விவாகரத்துக்கு பிறகு 2022 ஆம் ஆண்டு முதல் நாக சைதன்யா, சோபிதா துலிபாலா இருவரும் காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது.

    தங்க ஜரிகளால் அலங்கரிக்கப்பட்ட காஞ்சிவரம் பட்டு புடவை மற்றும் ஆபரணங்களில் சோபிதா துலிபாலா அழகாக காட்சியளித்தார்.

    நாக சைதன்யா, சோபிதாவிற்கு தாலி கட்டியவுடன் அவர் கண் கலங்கி, தனது கணவரை பார்த்து சிரித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    நாக சைதன்யாவின் தாத்தா அக்கினேனி நாகேஸ்வர ராவின் திருவுருவச் சிலையின் ஆசீர்வாதத்தின் கீழ் திருமணம் நடைபெற்றது.

    இவர்களின் திருமணத்தில் பிரபாஸ், ராம் சரண், சிரஞ்சீவி, ராஜமவுலி உள்ளிட்ட தெலுங்கு திரையுலகைச் சேரந்த பலரும் கலந்துகொண்டனர்.

    நாக சைதன்யாவின் தந்தையும், நடிகருமான நாகார்ஜுனா, புதுமணத் தம்பதிகளின் புகைப்படங்களை X தளத்தில் பகிர்ந்து, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.