உறவுகள் நிலைத்து நீடிக்க அல்லது முறிந்துவிட ஜாதகம் மட்டுமே காரணம் அல்ல. இருப்பினும் கிரக அமைப்பின்படி ஒரே ராசியில் திருமணம் செய்வது, பொருந்தாத ராசியுடன் திருமணம் செய்வதால் உறவில் சில எதிர்மறை விளைவுகள் ஏற்படலாம். ஒவ்வொரு ராசிக்கும் ஒரு சில பொதுவான குணாதிசயங்கள் இருக்கும். இந்நிலையில் ஒத்துப்போகாத அல்லது ஒரே மாதிரியான குணாதிசியங்களை கொண்ட இருவர் இணையும் போது நிச்சயமாக உறவில் விரிசல் ஏற்படும். ஜாதகம் மற்றும் ராசி பொருத்தத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் உங்கள் ராசிக்கு பொருந்தக் கூடிய சரியான ராசியை இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
பத்து பொருத்தம் பொருந்தினாலும் கணவன் மனைவி உறவில் நிச்சயம் சண்டைகள் வராமல் இருக்காது. கணவன் மனைவி உறவு விட்டுகொடுப்பது முக்கியமல்ல எந்த சூழலிலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் வாழ்வதே ஒரு நல்ல உறவின் அடையாளம். நல்ல புரிதலுடன் உங்களுக்கான சிறந்த துணையை தேர்ந்தெடுங்கள்.
ஜோடி பொருத்தம் கொண்ட ராசிகள்
மேஷம் - கும்பம்
இந்த இரண்டு ராசிகளுக்கும் இடையே உற்சாகமான குடும்ப வாழ்க்கை அமையும். இருவரும் புதிய விஷயங்களை முயற்சி செய்வதில் ஆர்வமுள்ளவர்கள்.
ரிஷபம் - கடகம்
இந்த இரண்டு ராசிக்காரர்களுக்கும், ஒருவரை ஒருவர் எளிதாக புரிந்து கொண்டு அவர்களின் தேவையை பூர்த்தி செய்வர். இந்த தம்பதிகள் இடையே நல்ல புரிதல் இருக்கும்.
மிதுனம் - கும்பம்
இவர்கள் இருவரும் படைப்பாற்றல் மற்றும் யோசிக்கும் திறனில் வல்லவர்கள். துணையின் சுதந்திரத்தில் தலையிடாமல் இருவரும் முடிந்தவரை ஒன்றாக நேரம் செலவிட முயற்சி செய்வார்கள்.
கடகம் - மீனம்
இவர்களிடையே வலுவான புரிதல் இருக்கும். இந்த இரண்டு ராசிக்காரர்களுக்கும் திருமண பொருத்தம் சிறப்பாக இருக்கும்.
சிம்மம் - தனுசு
இந்த இரண்டு ராசிக்காரர்களுக்கும் ஆர்வம் அதிகமாகவே இருக்கும். வாழ்க்கையை ரசித்து வாழும் இவர்கள், ஒருவரை ஒருவர் நேசிப்பதிலும் சலித்தவர்கள் அல்ல. இவர்கள் பெரும்பாலான விஷயங்களில் நிறைவு பெற்ற சிறந்த தம்பதிகளாக இருப்பார்கள்.
கன்னி - ரிஷபம்
இந்த ரெண்டு ராசிக்காரர்களும் மிகவும் நேர்மையானவர்கள். இந்த இரண்டு ராசிக்காரர்களும் திருமணம் செய்து கொண்டால், நல்ல புரியுதலுடன் ஆயுள் முழுவதும் உறவு தொடரும்.
துலாம் - மீனம்
இவர்களின் உறவு மிகவும் வலுவானது அதே சமயம் அழகானதும் கூட. இவர்கள் ஒன்று சேர்ந்தால் சிறந்த தம்பதிகளாகவும் நண்பர்களாகவும் வாழ்நாள் முழுவதும் இருப்பார்கள்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation