herzindagi
image

ஆடி மாதத்தில் அம்மனை வரவேற்க 5*1 புள்ளி கோலத்தை வாசலில் போடுங்க

ஆடி மாத பிறப்பில் அம்மனை வீட்டிற்கு வரவேற்க வாசலில் எளிதான 5*1 புள்ளி கோலம் எப்படி போடுவது என பார்க்கலாம். இந்த ஆடி மாத 5*1 புள்ளி கோலம் 15 நிமிடங்களுக்கு போடலாம்.
Editorial
Updated:- 2025-07-16, 20:04 IST

அம்மனுக்கு விஷேமான ஆடி மாதத்தில் வாசலில் கோலமிட்டு வீட்டிற்கு வரவேற்றால் மாதம் முழுக்க அம்மன் வீட்டிலேயே தங்கி அருள் புரிவாள். ஒவ்வொரு நாளும் வீட்டு வாசலில் கோலமிடுவது தெய்வீக சக்தியை கொண்டு வரும். இந்த ஆடி பிறப்பில் வீட்டு வாசலில் எளிமையான 5*1 கோலம் எப்படி போடுவது என பார்ப்போம்.

ஆடி பிறப்பு 2025

ஆடி மாத கோலம்

  • இது ஒரு 5*1 புள்ளி ஆடி மாதம் கோலமாகும். ஆதாவது ஐந்து வரிசை மற்றும் ஒற்றை நெடுவரிசையில் புள்ளிகள் வைத்து போடக்கூடிய கோலம்.
  • ஒற்றை நெடுவரிசையின் கடைசி புள்ளியில் தொடங்கி மூன்றாவது வரிசையின் கடைசி புள்ளியோடு வளைவான கோடு வரைந்து இணைக்கவும். நான்காவது வரிசையின் எந்த புள்ளியின் மீதும் படக்கூடாது.
  • அதே போல் ஒற்றை நெடுவரிசையின் கடைசி புள்ளியில் தொடங்கி மூன்றாவது வரிசையின் முதல் புள்ளியுடன் வளைவான கோடு வரைந்து இணைக்கவும்.
  • மூன்றாவது வரிசையின் புள்ளியில் இருந்து ஒற்றை நெடுவரிசையின் தொடக்க புள்ளியோடு இணைக்கவும். அதே மூன்றாவது வரிசையின் இறுதி புள்ளியில் இருந்து ஒற்றை நெடுவரிசையின் தொடக்க புள்ளியோடு வளைவான கோடு வரைந்து இணைக்கவும். பார்ப்பதற்கு நட்சத்திரம் போல் இருக்கும்.
  • மூன்றாவது வரிசையின் இரண்டாவது புள்ளி, இரண்டாவது வரிசையின் இரண்டாவது புள்ளி, மூன்றாவது வரிசையின் நான்காவது புள்ளி மற்றும் நான்காவது வரிசையின் மூன்றாவது புள்ளியோடு வளைவாக இணைத்து சின்ன நட்சத்திர கோலம் போடவும்.
  • அடுத்ததாக மூன்றாவது வரிசையின் மூன்றாவது புள்ளியில் (நடுபுள்ளி) மஞ்சள், குங்குமம் வைக்கவும். உள்ளே சின்ன நட்சத்திரத்தை சுற்றி சின்ன சின்ன புள்ளிகள் வைக்கவும்.
  • நான்காவது வரிசையின் முதல் புள்ளி, மூன்றாவது புள்ளியில் தனித்தனியாக வளைவான கோடு வரையவும். அதே போல் இரண்டாவது வரிசையின் முதல் புள்ளி, மூன்றாவது புள்ளியிலும் வரையவும்.
  • நடுவரிசையின் கடைசி புள்ளிக்கு கீழ் இரண்டு சிறிய நேர் கோடு இடைவெளி விட்டு வரையுங்கள். இதே போல் நடுவரிசையின் தொடக்க புள்ளி, மூன்றாவது வரிசையின் முதல் புள்ளி மற்றும் கடைசி புள்ளியில் வரையவும்.
  • சிறிய நேர் கோடுகளின் ஓரங்களில் சின்ன புள்ளி வைக்கவும். நான்கு திசைகளிலும் விளக்கு போன்ற வடிவத்தை வரையவும். விளக்குகளுக்கு உள்ளே உங்களுக்கு பிடித்தமான நிறங்களால் நிரப்புங்கள்.
  • நடுவே மஞ்சள், குங்குமத்தை சுற்றி சிறிய பூ வரையவும். வளைவான கோடுகளுக்கு மேல் ஒளி வடிவம் வரையுங்கள். ஒளியின் இருபுறமும் சுழித்துவிடுங்கள்.
  • ஆடி மாத பிறப்பில் இந்த 5*1 புள்ளி கோலம் மிக எளிமையாகவும், அழகாகவும் வாசலை அலங்கரிக்கும்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com