ஒரு சிலருக்கு வயிறு உப்பசம், பசியின்மை போன்ற பிரச்சனைகள் அடிக்கடி வரும். இதற்கு ஒரு முக்கிய காரணம் குடல் புழுக்கள். வயிறு மற்றும் குடலில் புழுக்கள் தொற்று என்பது பலருக்கும் ஏற்படும் ஒரு பொதுவான சுகாதார பிரச்சனையாகும். இது குறிப்பாக குழந்தைகளில் அதிகம் காணப்படுகிறது. இந்தப் புழுக்கள் உணவு, தண்ணீர் அல்லது சுத்தமற்ற கைகள் தொடர்பு மூலம் நம் உடலுக்குள் நுழைகின்றன. இது நாளடைவில் வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற நோய்களை உருவாக்கும். அந்த வரிசையில் இதை உடனே குணப்படுத்த உதவும் வீட்டு வைத்தியம் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
முதலில் ஒரு கிளாஸ் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விடுங்கள். தண்ணீர் சூடான பிறகு அடுப்பில் இருந்து இறக்கி விடலாம். இதை ஒரு கப்பில் ஊற்றி கொள்ளுங்கள். இப்போது அரை ஸ்பூன் உப்பு சேர்த்து கலக்க வேண்டும். பிறகு ஆமணக்கு எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். அப்புறம் நாம் எடுத்து வைத்த எலுமிச்சை சாற்றை கடைசியாக சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இதை வாரம் ஒரு முறை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். காலையில் எழுந்த உடனே முதலில் ஒரு அரை கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். அதற்கு பிறகு இந்த பானத்தை குடிக்கலாம். இதை குடித்த 15 நிமிடங்கள் அல்லது 30 நிமிடங்களில் வயிறு சுத்தம் ஆகி உடல் நச்சுக்கள் வெளியேற்ற உதவும். வயிற்றில் இருக்கும் புழுக்கள் அகற்ற இது பெரிதும் உதவும்.
ஆமணக்கு எண்ணெய் பாரம்பரிய மருத்துவத்தில் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது. இது வயிற்று சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கும் சக்திவாய்ந்த மூலிகை சாரம் கொண்டது. வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், அஜீரணம் மற்றும் வாயு போன்ற பிரச்சினைகளுக்கு இது ஒரு சிறந்த தீர்வாகும். ஆமணக்கு எண்ணெய் ஒரு இயற்கை ரேச்சகம் (Laxative) ஆக செயல்படுகிறது. இரவில் ஒரு தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெயை சூடான பாலுடன் கலந்து குடித்தால், மலச்சிக்கல் குறையும். இது குடல் இயக்கத்தை தூண்டி, மலம் கழிவதை எளிதாக்குகிறது. அதே போல வயிற்றில் வாயு அதிகரித்து வீக்கம் ஏற்பட்டால், ஆமணக்கு எண்ணெயை வயிற்றில் வலது பக்கமாக மெதுவாக தடவலாம். இது வாயுவை வெளியேற்றி, வயிற்று அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. அது மட்டும் இல்லாமல் சிறிதளவு ஆமணக்கு எண்ணெயை தேனுடன் கலந்து சாப்பிட்டால், அஜீரணம் மற்றும் அமிலத்தன்மை குறையும். இது இரையகக் குடலிய அழற்சியை (Gastritis) குறைக்கும்.
Image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com