இயற்கையாக கிடைக்கும் எண்ணெய் வகைகளில் தேங்காய் எண்ணெய் உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. ஆயுர்வேதத்தில் தேங்காய் எண்ணெயை பல ஆண்டுகளாக அதன் மருத்துவ பண்புகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர். ஆயுர்வேதத்தில் தென்னை மரத்தை வாழ்வதற்கான அனைத்தையும் கொடுக்கும் மரமாக குறிப்பிடுகின்றனர். தேங்காய் எண்ணெயை நாம் குடித்து பார்த்திருக்க வாய்ப்பில்லை. இதை காலை நேரத்தில் குடித்தால் உடலுக்கு சிறந்த டானிக் ஆக அமையும்.
ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடிப்பது உடலில் ஆற்றல் அளவுகளை அதிகரிக்கும். இதில் கெட்ட கொழுப்பு அதிகம் கிடையாது. தேங்காய் எண்ணெய் உங்களை நாள் முழுக்க புத்துணர்வுடன் வைக்கும். காலையில் பல் துலக்கியவுடன் இதை குடித்தால் அன்று முழுவதும் உடல் நீடித்த ஆற்றலை உணரும்.
தேங்காய் எண்ணெய் குடித்த பலரும் புத்துணர்வுடனும், கவலையில் இருந்து விடுபடுவது போன்ற உணர்வை பெற்றனர். இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் மனநலனை மேம்படுத்தக் கூடியது. தேங்காய் எண்ணெய் குடித்தால் செளகரியமாக உணர்வீர்கள்.
சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க தேங்காய் எண்ணெயை முதல் தேர்வாக கொள்ள வேண்டும். வறட்சியான மற்றும் சேதமடைந்த சருமத்தை தவிர்க்க தேங்காய் எண்ணெய் உதவும். தேங்காய் எண்ணெயை சருமத்தில் பயன்படுத்தினால் குளிர்ச்சியாக உணர்வீர்கள்.
தேங்காய் எண்ணெய் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளை கொண்டது. இது நோய் எதிர்ப்பு அமைப்புக்கு பயனளிக்கும். ஆயில் புல்லிங் செய்த நபர்களின் வாய்வழி சுகாதாரம் மேம்பட்டுள்ளது. நமக்கு ஏற்படும் உடல்நல பாதிப்புகள் வாயுடன் தொடர்புடையவை. ஆயில் புல்லிங் செய்வதால் வாயில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் அகற்றப்படுகின்றன.
தேங்காய் எண்ணெய் வளர்சிதை மாற்றம் மற்றும் தைராய்டு அமைப்பின் செயல்பாட்டுக்கு உதவுகிறது. மீடியம் செயின் கொழுப்பு அமிலங்களை கொண்டதால் தேங்காய் எண்ணெய் தனித்துவமான பண்புகளை கொண்டது. இது உடலில் எளிதில் ஜீரணம் ஆகி ஆற்றலாக மாறும். தேங்காய் எண்ணெய் உடலில் கொலஸ்ட்ரால் அளவுகளை குறைக்குமென கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் படிங்க சுரைக்காய் ஜூஸ் ஒரு டம்ளர் குடித்தால் நல்ல ஆரோக்கியத்துடன் நோய் இன்றி வாழலாம்
ஒரே ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் உதவும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com