Malai Face Pack: அனைவரும் பொறாமை படும் பேரழகை பெற கிரீம் ஃபேஸ் பேக்

கிரீம் உணவில் மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை, அவற்றை முகத்தில் பயன்படுத்தி பேரழகை பெறலாம்

malai face pack card image

ஒளிரும் சருமம் என்பது ஒவ்வொரு பெண்ணின் ஆசையாகும். ஆனால் காலப்போக்கிலும் கால நிலை மாற்றங்கள் காரணமாகவும் சருமம் மங்கத் தொடங்குகிறது. இதற்கு வேறு சில காரணங்களும் இருக்கலாம், உதாரணமாக சருமத்தை சரியாக பராமரிக்காதது மற்றும் தவறான சருமம் சார்ந்த பொருட்களை பயன்படுத்துதல் போன்றவை. ஆனால் நீங்கள் விரும்பினால் பளபளப்பான சருமத்தைப் பெறலாம். இதற்கு பல நூற்றாண்டுகளாக கடைபிடித்து வரும் அழகு முறை என்ன என்பதை பார்க்கலாம். முகத்தின் அழகை அதிகரிக்க பல நூற்றாண்டுகளாக பால் ஏடால் ஆன கிரீம் (பாலாடை) பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிரீம் கொண்டு தயாரிக்கப்பட்ட ஃபேஸ் பேக்கை முகத்தில் பூசுவதன் மூலமும் முகத்திற்கு பளபளப்பைக் கொண்டுவரலாம். கிரீம் கொண்டு ஃபேஸ் பேக் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? எனவே இந்த கட்டுரையை கடைசி வரை படியுங்கள்.

தேன் மற்றும் கிரீம் கொண்டு பேக் செய்யலாம்

cream face pack inside

சருமத்தை ஈரப்பதமாக்குவதற்கும், ஊட்டமளிப்பதற்கும், கிரீம் கொண்டு தேன் சேர்த்து அதைப் பயன்படுத்த வேண்டும்.

தேவையான பொருட்கள்

  • 1 ஸ்பூன் கிரீம்
  • 1 தேக்கரண்டி தேன்

செய்யும் முறை

  • முதலில் ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி கிரீம் மற்றும் 1 தேக்கரண்டி தேன் சேர்க்கவும்.
  • இப்போது இரண்டு பொருட்களையும் நன்றாக கலக்கவும்.
  • இப்போது க்ரீமினால் செய்யப்பட்ட ஃபேஸ் பேக் தயார்.

பயன்படுத்தும் முறை

  • இந்த பேக்கை உங்கள் முழு முகம் மற்றும் கழுத்தில் தடவவும்.
  • இப்போது உங்கள் முகத்தை மெதுவாக மசாஜ் செய்யவும்.
  • சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு அல்லது பேக் காய்ந்ததும் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

மஞ்சள் மற்றும் கிரீம் ஃபேஸ் பேக்

மஞ்சள் மற்றும் கிரீம் கொண்ட ஃபேஸ் பேக் மந்தமான முகத்திற்கு பொலிவைத் தரும். உங்கள் சருமத்தை பளபளக்க ஆரம்பிக்கும். ரோஜா எண்ணெயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன இவை முகப்பரு பிரச்சனையை குறைக்க உதவுகிறது.

தேவையான பொருட்கள்

  • 1 ஸ்பூன் கிரீம்
  • 2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • ரோஜா எண்ணெய் சில துளிகள்

செய்யும் முறை

  • 1 டீஸ்பூன் கிரீம், 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சில துளிகள் ரோஸ் ஆயில் ஒரு சிறிய பாத்திரத்தில் சேர்த்து கலக்கவும்.
  • இப்போது இந்த பொருட்களை நன்றாக கலந்து கெட்டியான பேஸ்ட்டை உருவாக்கவும்.
  • இப்போது உங்கள் வீட்டிலேயே ஃபேஸ் பேக் தயார்.

பயன்படுத்தும் முறை

  • மஞ்சள் மற்றும் கிரீம் கொண்டு செய்யப்பட்ட இந்த பேக்கை முகத்தில் தடவவும்.
  • பிறகு முகத்தை நன்றாக மசாஜ் செய்யவும்.
  • இந்த பேக் காய்ந்ததும் மைல்டு ஃபேஸ் க்ளென்சர் மூலம் முகத்தை சுத்தம் செய்யவும்.
  • வாரத்திற்கு இரண்டு முறையாவது இந்த பேக்கை பயன்படுத்தவும். உங்கள் முகம் தெளிவடையத் தொடங்கும்.

கடலை மாவு மற்றும் கிரீம்

gram flour inside

கடலை மாவு இறந்த சருமத்தை நீக்கி உங்கள் சருமத்தை பொலிவாக மாறும்.

தேவையான பொருட்கள்

  • கிரீம் ஒரு ஸ்பூன்
  • ஒரு ஸ்பூன் கடலை மாவு
  • அரை தேக்கரண்டி வால்நட் தூள்

செய்யும் முறை

  • இந்த பேக் செய்ய ஒரு ஸ்பூன் கிரீம், ஒரு ஸ்பூன் கடலை மாவு மற்றும் வால்நட் பவுடர் தேவைப்படும்.
  • சந்தையில் வால்நட் பவுடர் கிடைக்கும். ஆனால் நீங்கள் விரும்பினால் வீட்டிலேயே செய்யலாம்.
  • இந்த பொருட்கள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் நன்றாக கலக்கவும்.
  • கெட்டியான பேஸ்ட்டை உருவாக்கவும்.
  • இப்போது உங்கள் பளபளப்பான சருமத்திற்கான பேக் தயார்.

பயன்படுத்தும் முறை

  • இந்த பேக்கை உங்கள் முகத்தில் தடவவும்.
  • பின்னர் உங்கள் சருத்துல் தேய்க்கவும். இது உங்களது இறந்த சருமத்தை அகற்றும்.
  • பேக் காய்ந்த பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
  • கிரீம் மூலம் செய்யப்பட்ட இந்த பேக்கை வாரத்தில் மூன்று நாட்கள் பயன்படுத்தலாம்.
  • சிறிது நேரம் கழித்து சருமத்தை சுத்தமாகவும், பளபளப்பாகவும் மாறியிருப்பதைக் காண்பீர்கள்.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், தயவுசெய்து பகிரவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளைப் படிக்க Harzindagi உடன் இணைந்திருக்கவும்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP