herzindagi
age spots under eyes big image

40 வயதில் கண்களின் கீழ் ஏற்படும் கருவளையம் இல்லாமல் செய்ய சிறந்த வழி

<p style="text-align: justify;">40 வயதிற்குப் பிறகு கண்களுக்குக் கீழே கருவளையம் தோன்றினால் இந்த வீட்டு வைத்தியம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.&nbsp; <div>&nbsp;</div>
Editorial
Updated:- 2024-04-08, 19:16 IST

வயது அதிகரிக்கும் போது சருமத்தில் பல மாற்றங்கள் ஏற்படும். கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்கள் அல்லது மருக்கல் இவற்றில் ஒன்றாகும். இந்த பிரச்சனை பொதுவாக 35 வயதை அடையும் போது அனைவருக்கும் ஏற்படுகிறது. குறிப்பாக 40 வயதுடைய பெண்களின் முகத்தில் முதுமைப் புள்ளிகளை பார்க்கலாம். அழகு நிபுணர் டாக்டர் பார்தி தனேஜா கூறுகையில் கண்களுக்குக் கீழே உள்ள பகுதி அசைவில்லாமல் இருப்பதால் முதுமையில் கருவளையம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே முக மசாஜ் செய்வது அவசியம். அதனை சரிசெய்ய சமையலறையில் இருக்கும் சில பொருட்களை பயன்படுத்தலாம். இந்த கட்டுரையில் கண்களுக்குக் கீழே வயதான புள்ளிகளின் தோற்றத்தை எவ்வாறு குறைக்கலாம் அல்லது தடுக்கலாம் என்பதை பார்க்கலாம்.

மேலும் படிக்க: முகத்தில் ஏற்படும் கருமையை நீக்கி உடனடி பொலிவை தரும் சூப்பர் டிப்ஸ்

கண்களுக்குக் கீழே வயதான புள்ளிகள் ஏன் தோன்றும்?

வயது காரணி தவிர இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது முதலில் கண்களுக்குக் கீழே மசாஜ் செய்ய வேண்டாம், இரண்டாவதாக அதிகமாக வெயிலில் இருப்பது கூட காரணங்களாக இருக்கலாம். சூரிய ஒளியின் வெளிப்பாட்டின் காரணமாக அதிக மெலனின் சருமத்தில் உற்பத்தி செய்யத் தொடங்குகிறது. இதன் காரணமாக முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றும்.

கண்களுக்குக் கீழே உள்ள கரும்புள்ளிகளைக் குறைக்கும் வழிகள்

  • கற்றாழை ஜெல் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்த கலவையை ஐஸ் ட்ரேயில் ஊற்றி அவற்றை ஐஸ் கட்டிகளை உருவாக்கி. அதன் பின் இந்த ஐஸ் கட்டிகளை கண்களுக்கு அடியில் தடவ வேண்டும். இதை தொடர்ந்து 5 நிமிடங்கள் செய்ய வேண்டும். இதன் மூலம் உங்கள் கண்களுக்குக் கீழே உள்ள கருமைகள் மற்றும் புள்ளிகள் இரண்டும் மறைந்துவிடும்.
  • க்ரீன் டீ தண்ணீரில் 5 சொட்டு எலுமிச்சை சாறு கலந்து ஆறவைத்து பின்னர் இந்த கலவையில் பருத்தி உருண்டைகளை நனைத்து கண்களைச் சுற்றி தடவவும். இந்தக் கலவையை அப்படியே விட்டுவிடலாம். இதுவும் கரும்புள்ளிகளை குறைத்து கண்களின் பொலிவை அதிகரிக்கும்.

green tea inside

  • ஒரு வெற்றிலையில் பாலினால் செய்யப்பட்ட க்ரீமை எடுத்து ஒன்றாக அரைத்து பின் கண்களில் தடவவும். இதைச் செய்வதன் மூலம், கருவளையங்கள் குறைந்து வயதான புள்ளிகளும் இலகுவாக மாறத் தொடங்கும்.
  • சருமத்தில் மெலனின் உற்பத்தியைக் குறைக்க, சந்தையில் கிடைக்கும் சன்ஸ்கிரீனை மட்டும் பயன்படுத்தாமல், கரும்புச் சாற்றையும் பயன்படுத்தலாம். கரும்புச் சாறு சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, மெலனின் உற்பத்தியைக் குறைக்கிறது.
  • சந்தனம் மற்றும் முல்தானி மெட்டியுடன் ரோஸ் வாட்டரை கலந்து பேஸ்ட்டை தயார் செய்து இந்த பேஸ்ட்டை கண்களைச் சுற்றி தடவவும். 5 முதல் 10 நிமிடங்களுக்குள் கண்களை சுத்தம் செய்ய வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலன்களை காணலாம்.
  • சுத்தமான தேனைக் கொண்டு கண்களைச் சுற்றிலும் மசாஜ் செய்யலாம். தேனில் ஈரப்பதம் மற்றும் ப்ளீச்சிங் பண்புகள் உள்ளதால் கருவளையங்கள் மற்றும் கரும்புள்ளிகள் இரண்டும் குணமாகும்.

honey inside

  • பால், மஞ்சள் பேஸ்ட் செய்தும் பலன் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இது கருவளையங்களுக்கு குணப்படுத்துகிறது மற்றும் வயதான புள்ளிகளை குறைக்கிறது. 

மேலும் படிக்க: கோடைக்காலத்தில் ஏற்படும் சரும அரிப்புகளை ஈஸியா கையாளலாம்!!

இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் பேஸ்புக்கில் ஷேர் செய்து லைக் செய்யவும். இதே போன்ற கட்டுரைகளைப் படிக்க Harzindagi உடன் இணைந்திருங்கள்.


Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com