Trisha Krishnan : நடிகை த்ரிஷாவின் புடவை கலெக்‌ஷன்ஸ்

நடிகை த்ரிஷா கிருஷ்ணனின் ட்ரெஸ்ஸிங் சென்ஸிற்கு என தனி ஃபேன் பேஸ் இருக்கிறது. த்ரிஷாவின் விதவிதமான புடவை கலெக்‌ஷன்ஸ் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

trisha in beautiful saree
trisha in beautiful saree

நடிகை த்ரிஷா 20 ஆண்டுகளுக்கு மேல் சினிமாவில் ஜொலித்து வருகிறார்.பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றார். தற்போது விஜய்யுடன் இணைந்து லியோ படத்தில் நடித்து வருகிறார்.

த்ரிஷா பல விதமான உடைகளை எக்ஸ்பிளோர் செய்யும் ஃபேஷனிஸ்டாக திகழ்கிறார். எந்த ஒரு விழாவிற்கு த்ரிஷா வந்தாலும் அவர் அணிந்து வந்த உடையை பற்றி பேசாதாவர்களே இருக்க முடியாது. இந்த பதிவில் த்ரிஷாவின் புடவை கலெக்‌ஷன்ஸ் பற்றி பார்க்கலாம்..

இந்த பதிவும் உதவலாம் :தமன்னாவின் டயட் ரகசியம் என்ன தெரியுமா?

மெழுகு டாலு நீ!

பிங்க் நிற காஞ்சிவரம் புடவையில் பார்க்க செம்ம அழகாக இருக்கிறார்.புடவைக்கு மேட்சாக சிலீவ் லெஸ் பிளவுஸ் அணிந்துள்ளார். த்ரிஷா அணிந்திருக்கும் புடவை பிடித்திருந்தால் நீங்களும் ட்ரை பண்ணுங்க..

trisha saree

ரசிக்க வைக்கும் த்ரிஷா..

இதில் த்ரிஷா காஃபி நிறத்தில் புடவையும், மெரூன் கலர் பிளவுஸை தேர்ந்தெடுத்துள்ளார். புடவையில் முகைஷ் வேலை என்று சொல்லப்படும் பிரத்யேகமான எம்ட்ராய்ட்ரி வேலைகள் செய்யப்பட்டிருக்கிறது.மொத்தத்தில் இந்த லுக் கிளாஸாக இருக்கிறது.

trisha brown saree

மஞ்சக்காட்டு மைனா!

மஞ்சள் மற்றும் பச்சை நிற காம்போவில் லைட் வெயிட் புடவையை த்ரிஷா அணிந்துள்ளார்.புடவைக்கு ஏற்றமாதிரி மேக்கப் மற்றும் அணிகலன்களை சிறப்பாக தேர்ந்தெடுத்துள்ளார். நீங்களும் இதே கலர் காம்போவில் புடவை ட்ரை பண்ணி பாருங்க..

trisha yellow saree

ஜொலிக்கும் த்ரிஷா!

பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவிற்கு த்ரிஷா கட்டி வந்த புடவை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. செம்ம கிராண்டான இந்த புடவையை நீங்க ரிசெப்ஷன் போன்ற ஃபங்ஷனிற்கு கட்டிக்கொள்ளலாம். த்ரிஷாவின் புடவை கலெக்‌ஷன்ஸ் உங்களுக்கு பிடிச்சிருக்கா?

trisha ponniyin selvan saree

images credit: instagram

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP