குந்தன் என்பது தங்கத்தால் செய்யப்பட்ட நகைகளின் ஒரு வடிவமாகும். குந்தன் நகைகள் இந்தியாவின் பழமையான மற்றும் பாரம்பரிய நகை வடிவங்களில் ஒன்றாக இருக்கிறது. குந்தன் நகைகள் செய்யும் கலைக்கு ஜடாவ் நகைகள் என்றும் பெயர். குந்தன் வகை நகைகளின் நேர்த்தியான மற்றும் அழகான தோற்றத்தால் வட இந்திய திருமணங்களில் பயன்படுத்தப்படுகிறது. இன்றைய கால மாற்றத்துடன், குந்தன் நகை டிசைன்கள் பிரபலமான இடத்தை பெற்றுள்ளது. திருமண நிகழ்வுகளைத் தவிர வெளியில் செல்லும் நிலையிலும் குந்தன் வகை நகைகளைப் பெண்கள் அணிய ஆசைப்படுகிறார்கள். அனைத்து பெண்களும் விரும்பும் வகையில் உருவாக்கப்பட்ட குந்தன் நகை வடிவத்தைப் பார்க்கலாம்.
மேலும் படிக்க: அணிந்தால் ராணியின் தோற்றத்தைத் தரக்கூடிய லேட்டஸ்ட் குந்தன் நகை டிசைன்கள்
ஒவ்வொரு பெண்ணும் வைத்திருக்க வேண்டிய காலத்தால் அழியாத குந்தன் நகை டிசைன்கள். இந்த 6 வகையான குந்தன் நகைகள் பெண்களின் மனம் கவர்ந்த வகைகளாக இருக்கும்.
இந்த தனித்துவமான குந்தன் செட் நகையை அணிந்தால், நீங்கள் ராணியின் தோற்றத்தில் தெரிவீர்கள். ஆடம்பரமான வடிவமைப்பு தனித்துவமான வெளிர் வண்ண மணிகளால் உருவாக்கப்பட்ட சிக்கலான பாச்சி குந்தன் கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பிரத்தியேக வடிவம் அதிநவீன மற்றும் ஆடம்பரத்தை வெளிப்படுத்துகிறது.
Image Credit: pinterest
இந்த ஜடாவ் குந்தன் நெக்லஸ் செட் இந்திய கைவினை திறனை வெளிக்காட்டும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் சிக்கலான வடிவங்கள் அர்ப்பணிப்பையும் திறமையையும் பிரதிபலிக்கிறது. இந்த குந்தன் நெக்லஸ் இணையான காதணிகள் மேலும் ஒரு அழகைச் சேர்க்கிறது. நவீன மற்றும் பாரம்பரிய பெண்கள் இருவருக்கும் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Image Credit: pinterest
நெக்லஸின் மையப்பகுதியில் குந்தன் அமைக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ரத்தினக் கற்களை அமைத்து செய்யப்பட்டுள்ளது. பொதுவாக வைரங்கள் அல்லது விலைமதிப்பற்ற கற்கள், சிக்கலான வடிவத்தில் தங்கத்தை கொண்டு குந்தன் நகைகள் வடிவமைக்கப்படுகிறது. ஆனால் இந்த ரத்தினக் கற்களை கொண்டு துல்லியமாக அமைக்கப்பட்டுள்ளன.
Image Credit: pinterest
நேர்த்தியான ஸ்டைலில் வெள்ளை மோதிரத்துடன் தங்க குந்தன் நெக்லஸ். பழைய குந்தன் வடிவங்களில் மல்டி ஸ்டோன்ஸ் வைத்து, ஒயிட் மோதி வேலைகளால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குந்தன் செட் நகைகள் பாரம்பரிய மணமகளுக்கு ஏற்றது. இந்த குந்தன் ஜூவல்லரி செட் வசீகரமான தோற்றத்தை கொடுக்கக்கூடியது.
வண்ண மணிகள் மற்றும் பொருத்தமான காதணிகள் கொண்ட அழகான குந்தன் சோக்கர் செட். இந்த குந்தன் நகைகள் அனைத்து பார்ட்டி ஆடைகளுக்கும் பொருத்தமாக இருக்கும். பச்சை, இளஞ்சிவப்பு, பீச் மற்றும் கிளாசிக் முத்துக்களைக் கொண்டு நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது.
Image Credit: pinterest
தங்க முலாம் பூசப்பட்ட பழங்கால குந்தன் ஸ்டோன் பதிக்கப்பட்ட நெக்லஸில். இந்த நகைகளில் மணிகள் பதிக்கப்பட்டு, பல தொங்கும் கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
Image Credit: pinterest
மேலும் படிக்க: திருமண பெண்களுக்கான சிறந்த 5 பிரைடல் மேக்கப் லுக்
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com