herzindagi
food storing big

உணவை சேமித்து வைத்து சாப்பிடுபவரா நீங்கள்? எனில், இது குறித்து ஆயுர்வேதம் கூறுவது என்ன தெரியுமா?

உணவை எப்படி எல்லாம் சேமிப்பது என்பதை படித்தறிந்து பயன்பெறலாம்.
Expert
Updated:- 2022-11-29, 12:38 IST

உணவை சேகரித்து வைப்பதால் என்ன ஆகுமென்பதை ஆயுர்வேதம் விளக்கியுள்ளது. இது குறித்த சிறப்பு தகவலை தான் நாம் இப்போது படித்தறிந்து பயன் பெற போகிறோம்.

நாம் சமைத்து வைத்திருக்கும் உணவில் மீதமிருக்கும் போது, அதனை ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடுவோம். இந்த எளிய வழியையே பலரும் கடைப்பிடித்து வருகின்றனர். எனினும், இவ்வாறு சேகரித்து வைக்கும்போது, ஒரு சில விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு சேகரித்து வைப்பதில் நாம் அலட்சியம் காட்டும்போது, அது உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கிறது.

பச்சை உணவுகள், வேகவைத்த உணவுகள், பாக்கெட்டில் உள்ள உணவுகள் என பலவிதமான உணவுகளை நாம் சேமித்து வைப்பது வழக்கமாகும்.

இந்த பதிவின் மூலமாக ஆயுர்வேத டாக்டர் வரலட்சுமி அவர்கள் உணவை சேமித்து வைத்து சாப்பிடும்போது நாம் செய்யும் தவறுகளையும், அவற்றை எப்படி சரி செய்வது என்பதையும் விளக்குகிறார்.

உணவை சேகரித்து வைப்பது எப்படி?

food storing

இந்திய மக்கள் உணவை பாத்திரங்களில் வைக்கின்றனர். ஆனால் எந்தவொரு உணவையும் வைக்க வெவ்வேறு விதமான பாத்திரங்கள் பயன்படுத்த வேண்டும் என்கிறார் வரலட்சுமி அவர்கள். அதேபோல எந்தவொரு உணவையும் பாத்திரத்தில் சேகரித்து வெகு நேரத்துக்கு வைப்பது உடல்நலனை பாதிக்கும் என்றும் அவர் கூறுகிறார்.

ஜூஸை சேகரிப்பது எப்படி?

food storing

பாத்திரத்தில் ஜுஸை சேகரித்து வைத்தால், அந்த தவறை மீண்டும் செய்யாதீர்கள் என்கிறார். மேலும், சில்வர் பாத்திரங்களே ஜூஸை சேகரிக்க பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

ஜூஸ் மற்றும் சிரப்பை சில்வர் பாத்திரங்களில் குளிர்ச்சியாக வைக்கலாம் என்றும் அவர் கூறுகிறார். இது உடல்நலனை எந்த விதத்திலும் பாதிப்பது இல்லை என்றும் அவர் கூறுகிறார்.

நெய்யை சேகரிப்பது எப்படி?

food storing

இந்திய சமையலறையில் பொதுவாக பயன்படுத்தப்படும் ஒரு உணவுப்பொருள் தான் நெய். ஒரு சிலருக்கு நெய் சேர்க்காமல் சாப்பிடவும் பிடிப்பதில்லை. ஆனால், நெய்யை சேகரிக்கும்போது ஒரு சில விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும் என்றும் வரலட்சுமி அவர்கள் கூறுகிறார். ‘நெய்யினை நாம் இரும்பு பாத்திரம் அல்லது ஜாடியில் சேகரிக்க வேண்டும்’ என்கிறார். ‘ஒருவேளை இதுவரை நெய்யை பிளாஸ்டிக் பாட்டிலில் நீங்கள் சேகரித்து வந்திருந்தால், இனிமேல் இரும்பு பாத்திரத்தில் சேகரிக்க பழகுங்கள்.’ என்றும் அவர் பரிந்துரை செய்கிறார்.

புளிப்பான உணவை சேகரிப்பது எப்படி?

எந்தவொரு பாத்திரத்திலும் சிட்ரஸ் பழங்களை சேகரித்தால் எந்த மாதிரியான மோசமான விளைவை உண்டாக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இது போன்ற சூழலில், கல் பாத்திரங்கள் பயன்படுத்தி நாம் சிட்ரஸ் பழங்கள் அல்லது உணவை சேகரிக்கலாம். கல் பாத்திரங்களில் சிட்ரஸ் பழங்களை சேகரிப்பதால் பயப்பட வேண்டிய அவசியமில்லை. மேலும் உணவும் பிரெஷ்ஷாக இருக்கும்.

நாம் கவனிக்க வேண்டியவை

food storing

  • எந்தவொரு பாத்திரத்தை காட்டிலும் சில்வர் பாத்திரம் தான் வேகவைத்த கறியினை வைக்க சிறந்ததாக உள்ளது
  • பழங்களை சேகரிக்க பிரெஷ்ஷான இலைகளை நாம் பயன்படுத்தலாம்
  • இரும்பு பாத்திரங்களில் சிட்ரஸ் பழங்களை சேகரிக்க கூடாது
  • தண்ணீரை சேகரிக்க காப்பர், சில்வர் அல்லது மட்பாண்டங்களை நாம் பயன்படுத்தலாம்

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Image Credit: freepik, shutterstock

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com