உடல்எடையைக் குறைக்க விரும்பும் எந்த நபராக இருந்தாலும் முதலில் உணவுமுறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும். சாதாரணமாக ஒரு மனிதனுக்கு தினமும் ஆயிரத்து 800 முதல் 2 ஆயிரம் கலோரிகள் வரை தேவைப்படுகிறது. உடல்எடையைக் குறைக்க விரும்பினாலும் கலோரிகளின் அளவை குறைக்க கூடாது. உடலில் இருக்கும் கொழுப்பை கரைக்க முயற்சிக்க வேண்டும். மாவுச்சத்து அதிகம் கொண்ட உணவுகளை குறைத்து புரதம், நார்ச்சத்து அதிகமுள்ள உணவுபழக்கத்திற்கு மாறுவது அவசியம். உணவுமுறை மாற்றத்தோடு ஒரு சில பயிற்சிகளை தொடர்ந்து செய்வது நிச்சயம் உடல்எடை இழப்புக்கு வழிவகுக்கும்.
எடை இழப்புக்கு மாலை நேரத்தில் தின்பண்டங்கள் சாப்பிடுவது பலன் தரும் என்ற உண்மை உங்களுக்கு தெரியுமா ? தின்பண்டங்கள் என்றால் சுட சுட பஜ்ஜி, போண்டா, சமோசா சாப்பிடுவது கிடையாது. உடல் எடை குறைப்புக்கு மாலை நேரத்தில் சாப்பிட வேண்டிய சில உணவுகள் இங்கே...
நான்கு மணிக்கு மேலாக வேகவைத்த சுண்டல் அல்லது பயறு வகைகளில் கொஞ்சம் உப்பு சேர்த்து 100 கிராம் அளவுக்கு சாப்பிடவும்.
யோகர்ட்-ல் புரதம் நிறைந்திருக்கிறது. இதில் சர்க்கரை குறைவாகவும் உள்ளது. இதில் பெர்ரி பழங்களை கலந்து சாப்பிடுவது நார்ச்சத்தை வழங்குகிறது.
கேரட், வெள்ளரிக்காய் மற்றும் குடமிளாய்களை மாலை நேரத்தில் சாப்பிடுவது உங்களை வயிறை திருப்திகரமாக உணர வைக்கும். இவை சத்தான சிற்றுண்டியும் கூட.
மாலை நேரத்தில் எளிதாக தயாரித்து சாப்பிடக்கூடிய தின்பண்டமான பாப்கார்ன் குறைந்த கலோரிகளை கொண்டது. ஆனால் இதில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. இதில் மிளகு, புதினா பவுடர்களை போட்டு சாப்பிடலாம்.
மேலும் படிங்க குழந்தைகளின் மூளை செயல்திறனை அதிகரிக்கும் எட்டு சிறந்த உணவுகள்
அவித்த முட்டைகள் புரத சத்தின் சிறந்த ஆதாரமாகும். இது உங்களை முழுமையாகவும் திருப்தியாகவும் உணர உதவும்.
சிறிய கையளவு நட்ஸில் ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம் மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிறைந்திருக்கிறது. இது ஒரு திருப்திகரமான தின்பண்டமாகும்.
பாலாடைக்கட்டியுடன் தானியங்களை சேர்த்து சாப்பிடுவது உங்களது உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும். இதில் புரதங்கள், கார்போஹைட்ரேட் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்திருக்கின்றன.
தயிர் அல்லது வெண்ணெய் சேர்த்து தயாரிக்கப்பட்ட டுனா சாலட் குறைந்த கலோரி மற்றும் அதிக புரதம் கொண்ட தின்பண்டமாகும்.
மேலும் படிங்க புரதச்சத்து குறைபாடா ? நீங்கள் சாப்பிட வேண்டிய சைவ, அசைவ உணவுகள்
எடை இழப்புக்கு நீங்கள் மாலை நேரத்தில் சாப்பிடும் தின்பண்டங்கள் சத்தானதாகவும், திருப்திகரமாகவும் மற்றும் உணவு முறையின் ஒரு பகுதியாகவும் இருக்க வேண்டும். உங்களுக்கு பசி எடுப்பதாக உணர்ந்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். வலு கட்டாயமாக நேரத்தை கணக்கிட்டு சாப்பிடுவதை தவிர்க்கவும். தின்பண்டங்கள் சாப்பிடுவதிலும் அளவு நிர்ணயம் தேவை.
இது போன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com