கோடை காலத்தில் ஜில்லுன்னு எதாவது ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்பது அனைவரின்ன் ஆசையாக இருக்கும். மலைப்பிரதேசம் என்றால் ஊட்டி, கொடைக்கானல் தான் என நினைத்து பலரும் அந்த நினைப்பை அழித்து விடுவார்கள். ஆனால் இனிமேல் ஜில்லுன்னு அவுட்டிங் போக வேண்டும் என்றால் நினைத்தால் யோசித்தாதீங்க. உடனே கிளம்புங்க. சென்னைக்கு அருகில் இத்தனை மலைப்பிரதேசங்கள் உள்ளன.
கிரவு காரில் கிளம்பினா விடியற்காலைக்குள் சென்று சேர்ந்து விடலாம். எந்த பக்கம் திரும்பினாலும் பச்சை மரங்கள், சின்ன சின்னமலை கிராமங்கள், பனிமூட்டம் என சென்னைக்கு அருகில் இருக்கும் மிகச் சிறந்த மலைப்பிரதேசம். இங்கு சுற்றி பார்க்க நிறைய இடங்க உள்ளன. வாகனம் செல்லவும் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. ஒடு நாள் ட்ரிப் போக மிகச் சிறந்த இடம் கொல்லி மலை.
இந்த பதிவும் உதவலாம்:திருவனந்தபுரத்தில் சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள்
சென்னையில் இருந்து 465 கிமீ தொலைவில் உள்ளது சிறுமலை. மேம் தரையில் ஊர்ந்து செல்லும் அழகு, அருவிகள், ஏரிகள் என கோடைக்கு ஏற்ற குளிச்சியான இடம். குடும்பத்துடன் சென்று வரலாம். போக்குவரத்து வசதிகள் அனைத்தும் உள்ளன.
சென்னையில் இருந்து வெறும் 230 கிமீ தொலைவு பயணம் தான். இந்த கோடை விடுமுறைக்கு பலரும் ஏலகிரி நோக்கி படையெடுத்து வருகின்றன. 2 நாள் ட்ரிப்புக்கு ஏற்ற இடம். மிகச் சிறந்த மலைப்பிரதேசமும் கூட.
சென்னையில் இருந்து சரியாக 530 கிமீ தொலைவில் உள்ளது பழனி மலை. இங்கு இரவு நேரத்தில் குளிர் வாட்டி வதைக்கும். நல்ல குளிர்ச்சியான காலநிலையை உணரலாம். பழனியில் கோயிலை தாண்டி சுற்றி பார்க்க பல இடங்கள் உள்ளன.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: shutterstock
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com